மதுரை மேல மாசி வீதி மலபார் ஷோரூமில் வைர நகைகளின் கலைநயமிக்க கண்காட்சி

Madurai Minutes
0

கலைநயமிக்க வைர நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை மேல மாசி வீதி ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன. 


இந்த கண்காட்சியை Dr. சுப்புராஜ் & திருமதி. லட்சுமி பிரபா மற்றும் திரு. இளஞ்செழியன் & திருமதி. கிருத்திக்கா ( ஆகியோர் துவக்கி வைத்தனர். இவர்களுடன் திரு.ஷிஹாபுதீன் (மதுரை மேல மாசி வீதி)  மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளை  துணை தலைவர்), திரு.மாரிமுத்து (மதுரை மேல மாசி வீதி  மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளை மேலாளர்), திரு.கார்த்திக் குமார் (மதுரை மேல மாசி வீதி  மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளை துணை வர்த்தக மேலாளர்), திரு.ஜெயகுமார் (மதுரை மேல மாசி வீதி  மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளை விற்பனை மேலாளர்),   மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர்.


மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான “மைன்” பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட “எரா” மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான “பிரீசியா” நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான “எத்தினிக்” நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான “ஸ்டார்லெட்” ஆகியவை இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.  இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. 


கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த கண்காட்சி ஜூன்01,2024 ஆம் தேதி முதல் ஜூன் -09,2024 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.


மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 12 நாடுகளில் 335-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி ஆகிய நகரங்களில் 26 கிளைகளை கொண்டுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !