அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தினர் கோரிக்கை

Madurai Minutes
0

மத்திய மாநில அரசுகளுக்கும் மற்றும் ரிசர்வ் பேங்க்கும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம். 


கொரோனா காலகட்டத்தில் இருந்து சிறு குறுந்தொழில்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் பொருளாதார பாதிக்கும் சூழ்நிலை இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் சிறு நிறுவனங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. பொருளாதார மந்தமான நிலையில் பணம் புழக்கம் இல்லாத காரணத்தினாலும் பல தொழில்கள் மூடுகின்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டது. காரணம் ஒவ்வொரு தொழில்துறைக்கான மூலப் பொருட்களின் விலை ஏற்றம் அதனால் சந்தையில் விலை கிடைக்கவில்லை. மின்சார கட்டணம் பல மடங்கு உயர்வு  இதனால் உற்பத்தி திறன் குறைக்கப்படுகிறது. பேங்கில் வட்டி விகிதம் அதிகரித்து வருகிறது. 


இதனால் தொழில் வளர்ச்சி பாதிப்பு.கொரோனா காலகட்டத்தில் கடன் கட்டுவதற்கான காலத் தவணை ரிசர்வ் வங்கி மத்திய அரசு அறிவித்தும் அந்த காலகட்டத்தில் செக் பவுஸ் என்று சொல்லி வட்டி வசூல் செய்வது அப்பதாரப்பட்டி வசூல் செய்வது மட்டுமல்லாமல் சிபில்லையும் பாதிக்கும்படி செய்யப்படுகின்றனர். இதனால் இவர்கள் வேறு வங்கிகளில் கடன் பெற முடியவில்லை. அப்படி ஒரு சில வங்கிகளில் கடன் கிடைத்தாலும் வட்டி அதிகமாக இருக்கின்றது.இதையும் மீறி சந்தைப்படுத்தும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொருளுக்கான நிலைப்பாடுகள் கொண்டு இருப்பதினால் தான் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு இயலாத காரணமாக இருக்கின்றது. குறிப்பாக ஜிஎஸ்டி குறைபாடு, மின் கட்டணம் உயர்வு, வாடகை உயர்வு,டோல்கேட் உயர்வு, அனைத்து மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு இருப்பதாக அதிகாரிகளினால் தொடர்ந்து இடையூர் வந்து கொண்டே இருக்கின்றது. 


தற்போது நிலையில் இரண்டாம் தலைமுறை தொழிலுக்கு வருவது அரிதாக இருக்கின்றது. வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா கொண்டு வருவது சிறப்பு அம்சம் இருந்தாலும் இங்கு இருக்கின்ற சிறு குறுந் தொழில்களை பாதுகாக்கின்ற பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்றது. முதலில் நம்மை வளப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். காரணம் சிறு குறுந்தொழில்தான் நாட்டின் அதை உடைத்து எறிய வேண்டாம். உடனடியாக இதற்கான தீர்வு காணப்படவில்லை என்றால் இன்னும் இரண்டு வருடத்திற்குள் 70% தொழில்துறையினர்கள் மூடப்படும் நிலைமை வந்துவிடும் அதுமட்டுமல்லாமல்  லட்சக்கணக்கான மக்கள் தனது வேலையையும் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. 


இது ஒரு பக்கம் இருந்தாலும் அரசு மற்றும் தனியார் பேங்குகளில் அட்டகாசங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதன் போக்குகளை ரிசர்வ் பேங்க் தனியார் வங்கிகளில் வரமுறையை கொண்டு வர வேண்டும். கடந்த மாதங்கள் வரை சரியாக கவனித்தொகை கட்டிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது பொருளாதார சூழ்நிலை காரணமாகவும் வியாபாரம் இல்லாத காரணத்தினாலும் தற்போது மாதத் தவணை கட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தொழிலதிபர்கள் தொழில் முனைவோர்களை குண்டலையை வைத்து அவமானப்படுத்துவது தயாரிப்பு நிறுவனங்களில் சென்று அமர்ந்து கொண்டு சட்டம் பேசுவது, ஒவ்வொரு தொலைபேசியில் இருந்தும் சென்னையில் இருந்து பேசுகின்றோம் மும்பையில் இருந்து பேசுகின்றோம் என்று கூறி இரவு முழுவதும் தொந்தரவு செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு செல்ல முயல்கின்றார்கள். 


இது தொடர் கதையாக வாடிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ரிசர்வ் பேங்க் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவல்துறையும் இதை உடனடியாக தடுக்கப்பட வேண்டும். உயிராவது காப்பாற்றப்படும். பேங்கில் பெறப்பட்டுள்ள கட்டம் முடியாத கடன்களுக்கு மேலும் அவகாசம் கொடுக்கப்பட்டு தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் மற்றும் மத்திய மாநில அரசுகளை தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் கேட்டுக்கொள்கின்றது. 


 மாநிலத் தலைவர் டாக்டர் க.திருமுருகன் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !