8, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி

Madurai Minutes
0


மதுரை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்க அழைப்பு விடுவிக்கப்படுகிறார்கள்.

 மதுரை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் TNSDC திட்டத்தின் கீழ் குறுகிய கால பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக மாநில அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து, இந்த நிலையத்தில் Field Technician - Other Home Appliances tomb Automotive Service Technician (Two & Three Wheelers) Bu தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Field Technician - Other Home Appliances பிரிவில் சேருவதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி அல்லது DIPLOMA தேர்ச்சி, வயது 14 முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும். பயிற்சிக் காலம் 3 மாதங்கள் (400 மணிநேரம்).

Automotive Service Technician (Two & Three Wheelers) பிரிவில் சேருவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, வயது 14 முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும். பயிற்சிக் காலம் 3 மாதங்கள் (490 மணிநேரம்)

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற மாணவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதி உள்ளவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் மதுரை, கோ. புதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர்/முதல்வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்களான (9976150834 8825511818) ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 15.12.2022-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !