தென்பழஞ்சியில் புதிய பள்ளி கட்டடம் கட்ட பூமி பூஜை

Madurai Minutes
0

 


மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வடபழஞ்சி ஊராட்சிக்குட்பட்ட தென்பழஞ்சியில் அரசு நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை  100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் தற்காலிகமாக நூலகத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி தீவிர முயற்சியால் தென்பழஞ்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த புறம்போக்கு நிலம் 50 சென்ட்டை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.18. 80 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி, திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத் தலைவர் இந்திரா ஜெயக்குமார்,  மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர், துணைத்தலைவர் ஆனந்தவள்ளி ராஜாங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமொழி, ஒப்பந்ததாரர் பிரபு ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் சுகன்யா, தமிழ் அழகு உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும்  பாலா வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !