கடம்ப மரங்களை அதிகரிக்க அறிவியல் ஆய்வுகள்: கடம்ப மரம் காணல் நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

Madurai Minutes
0

 

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடர்பியில் துறை சார்பாக மதுரை சுற்றுச்சூழல் மரபும் எதிர்கால செயல்பாடுகளும் என்ற தலைப்பில் கடம்பமரம் காணல்- இயற்கை ஊடக நிகழ்ச்சி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள கடம்பூரணியில் கடம்பமரத்தடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருநகர் பக்கம் மதுரை இணை ஒருங்கிணைப்புச் செய்தது. 

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் அவர்கள் இயற்கை வளம் மற்றும் கடம்ப மரங்கள் சார்ந்த பல முன்னெடுப்புகளை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறதெனவும், அது அனைவரின் சமுதாய கடமை எனவும் கூறினார். மேலும் இந்த செயல்பாடுகளில் முறையான ஆராய்ச்சிமுறைகள், விளக்கங்கள் மற்றும் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் பல்கலைக்கழக வளாகத்தில் கடம்ப மரங்களை நட்டு வளர்ப்பதற்கான வேலைப்பாடுகளை செய்ய முனைப்பாக இருக்கிறோம் எனக்கூறினார்.

சிறப்புரையில் பேசிய பதிவாளர் சிவக்குமார் அவர்கள் இந்த கடம்ப மரங்கள் மற்றும் இயற்கை சார்ந்த தேடல்களும் செயல்பாடுகளும் நம் வாழ்வியலோடு தொடர்புடையவை என்றும் மதுரை பல்கலைகழக வளாகத்தில் கடம்ப மரங்களை பெரியளவு வளர்க்க வேண்டுமென்றார். 

கொங்கர் புளியங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சிவகாமி தர்மர் பங்கேற்றார்.

தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜி. ஸ்ரீதேவி திசு வளர்ப்பு வழியாக கடம்பங்களை வளர்ந்திருந்ததைக் அனைவருக்கும் காட்டினார். நிகழ்வில் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவர் முனைவர் சு. நாகரத்தினம் பேசும் போது, மதுரையின் இயற்கைச் சூழல் மீட்டெடுக்க கடம்ப மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கு இந்த அறிவியல் ஆய்வுகள் உதவும் என்றார். 

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் பாபுராஜ், ஸ்ரீ தேவி, ரமேஷ், ஆனந்த் ஆகியோர் அறிவியல் பின்னணி குறித்துப் பேசினர். மற்றும் நறுங்கடம்பு நுால் ஆசிரியர் கார்த்திகேயன், மற்றும் திருநகர் பக்கம் விஷ்வநாத் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் பாபுராஜ், ஸ்ரீ தேவி, ரமேஷ், ஆனந்த், செயற்பாட்டாளர் விஷ்வநாத், நறுங்கடம்பு நூலாசிரியர் கார்த்திகேயன் மற்றூம் ஆய்வு மாணவர்கள் ஆகியோர் பங்கேற்று கடம்ப மரத்தின் சூழல் சார்ந்த நன்மைகள், மருத்துவ குணங்கள், மரங்களின் அமைவிடம் அவற்றின் வருங்கால வளர்ச்சி குறித்த திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பேசினர்.பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !