நாகமலை நண்பர்கள் மைய ஆண்டு விழா முன்னாள் எம.எல்.ஏ.பழ.கருப்பையா பங்கேற்பு

Madurai Minutes
0

 

மதுரை

நாகமலை நண்பர்கள் மையத்தின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பரிசளிப்பு விழா என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நடைபெற்றது. நாகமலை நண்பர்கள் மைய தலைவர் பெர்னாட்ஷா தலைமை வகித்தார். தொழிலதிபர் முத்து முன்னிலை வகித்தார். சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். செயலாளர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். 

துணைத்தலைவர் கடசாரி

பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்து கூறினார். இணைச் செயலாளர் ஈஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். கவிஞர் பொற்கை பாண்டியன், மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி, கவிஞர் ஞானபாரதி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து ஆண்டு விழா மலரை முன்னாள் எம்எல்ஏ பல கருப்பையா வழங்கிட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.நாகமலை நண்பர்கள் மையம் சார்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முடிவில் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

இதில் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !