தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கிளியர் ஆர்டி மற்றும் சின்க்ரனி வசதியுடன் கூடிய டோமோதெரபி சாதனம் தொடங்கி வைப்பு  

Madurai Minutes
0

 

மதுரை: 

 தமிழ்நாட்டில் முதன்முறையாக  கிளியர்   ஆர்டி மற்றும் சின்க்ரனி வசதியுடன் கூடிய டோமோதெரபி சாதனம் மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.  இத்தொடக்கவிழா நிகழ்வில் இம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர். S. குருசங்கர், திருமதி. காமினி குருசங்கர், கதிரியக்க புற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர். K.S. கிருஷ்ணகுமார், குடல் இரைப்பை சிகிச்சை துறையின் தலைவரும், மருத்துவ இயக்குனருமான டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி, மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். B. கண்ணன் ஆகியோர் உட்பட, உயர் நிர்வாகக் குழுவினரும், மருத்துவ நிபுணர்களும் பங்கேற்றனர்.  

 

இந்நிகழ்வின் உரையாற்றிய MMHRC – ன் தலைவர் டாக்டர். S. குருசங்கர், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இம்மருத்துவமனையின் புத்தாக்க முனைப்புத் திட்டங்கள் குறித்து விளக்கமாகப் பேசினார். “இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைமுறையில் ஒரு சிறப்பான மாற்றத்தை விளைவிக்கும் வகையில்  கதிரியக்க சிகிச்சையில் இந்த மிக நவீன சாதனத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.  புதிய தொழில்நுட்பங்களை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்து சேவையாற்றுவதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தொடர்ந்து சிறப்பான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.  உடல்நலப் பராமரிப்பு சேவை தரநிலைகளை,  குறிப்பாக தென் தமிழ்நாட்டில் உயர்த்துவதை  இலக்காகக் கொண்டு இது தீவிரமாக செயலாற்றி வருகிறது.” என்று அவர் கூறினார். 

 

டோமோதெரபி என்பது, புற்றுநோய்க்கான ஒரு சிகிச்சை செயல்முறையாகும்.  நோயாளி சிகிச்சை மேஜையில் படுத்திருக்கும் நிலையில், வேறுபட்ட பல திசைகளிலிருந்து புற்றுக்கட்டியை இலக்காக கொண்டு கதிர்வீச்சு சிகிச்சை இதன் மூலம் செய்யப்படுகிறது.  இந்த இயந்திரத்தில் உள்ள கதிரியக்க ஆதாரம் நோயாளியைச் சுற்றி சுழற்சி முறையில் சுற்றுகிறது. தெளிவான ஆர்டி மற்றும் சின்க்ரனி வசதியுடன் கூடிய டோமோதெரபி சாதனத்தின் அறிமுகம், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை திறன்களை கணிசமான அளவு வலுவாக்கியிருக்கிறது.  புற்றுநோய் சிகிச்சை வரலாற்றில் கதிரியக்கப் பிரிவில் ஒரு புரட்சிகரமான புதிய பாதையை அளிக்கும் முன்மாதிரி நிகழ்வுகளுள் ஒன்றாக இது திகழ்கிறது.  உடலின் எந்தவொரு பகுதியிலும் உள்ள புற்றுக்கட்டிகளுக்கு பிரத்யேகமான மற்றும் துல்லியமான கதிரியக்க சிகிச்சை வழங்கப்படுவதற்கான செயல்முறையை டோமோதெரபி முற்றிலுமாக மறுவரையறை செய்கிறது.  நோயாளிகளின் சௌகரியத்திற்கும், வாழ்க்கைத் தரத்திற்கும் புதிய அளவுகோலை இதன்மூலம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறது.  

“மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரத்தில், மிக நவீன தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தவும், உலகின் முதன்மையான மருத்துவமனைகளில் மட்டுமே பொதுவாகக் காணப்படும் சேவைகளை வழங்கவும் இயலும் என்பதற்கான வலுவான ஆதாரமாக கிளியர்ஆர்டி மற்றும் சின்க்ரனி வசதியுடன் கூடிய தமிழ்நாட்டின் முதல் டோமோதெரபி சாதனம் நிறுவப்பட்டிருப்பது திகழ்கிறது.  சிகிச்சையில் சிறந்த பலனளிக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து பயன்படுத்துவது என்பது நாங்கள் எப்போதும் ஆர்வம் செலுத்துகின்ற ஒரு நடவடிக்கையாக இருக்கிறது.  அத்துடன், பொதுமக்களுக்கு இத்தகைய நவீன தொழில்நுட்பம் எளிதாக கிடைக்க பெறுவதாகவும் நாங்கள் செய்கிறோம்.” என்று டாக்டர். S. குருசங்கர் குறிப்பிட்டார். 

 

கதிரியக்க புற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர். K.S. கிருஷ்ண குமார் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் கூறியதாவது: 'தமிழ்நாட்டில் முதன்முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கு இத்தகைய மிக நவீன சாதனத்தை MMHRC அறிமுகம் செய்திருப்பது நோயாளிகளுக்கு நம்பிக்கையும், தைரியமும் வழங்குவதாக இருக்கிறது.  இந்த சாதனத்தின் உதவியைக் கொண்டு நோயாளியின் புற்றுநோய் கட்டி அமைந்திருக்கும் இடத்தையும், அளவையும் மற்றும் வடிவையும் துல்லியமாக கண்டறிந்து, கதிரியக்க சிகிச்சையை வழங்கமுடியும்.  கதிர்வீச்சு ஒளிக்கற்றையின் அளவு, வடிவம் மற்றும் தீவிரத்தை தேவைக்கு ஏற்றவாறு நிர்ணயிப்பதன் மூலம்  புற்றுநோய் கட்டி  பாதிப்பில்லாத திசுக்களின் மீது கதிர்வீச்சு செலுத்தப்படுவதை குறைக்க முடியும். வழக்கமான புற்றுநோய் சிகிச்சை சாதனங்களுடன் ஒப்பிடுகையில், கிளியர் ஆர்டி – ன் மேம்படுத்தப்பட்ட தெளிவான படம்  புற்றுநோய் கட்டி   குறித்து அதிகமாக அறியவும், தெளிவாகக் காணவும் மற்றும் உரிய சிகிச்சையை வழங்கவும் மருத்துவர்களை ஏதுவாக்குகிறது.' 

மருத்துவ சிகிச்சை வழங்கல் திறன்களை அதிகமாக்குவதற்கு இப்பிரிவில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த இயக்கத்திறனை கிளியர்ஆர்டி வழங்குகிறது என்று கதிரியக்க புற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர்.  K.S . கிருஷ்ண குமார் கூறினார்.  மருந்தின் அளவை அதிகரிக்கவும் மற்றும் இலக்கின் மீது துல்லியமாக சிகிச்சையை வழங்கவும் சின்க்ரனி தொழில்நுட்பத்தை மருத்துவர்கள் பயன்படுத்த முடியும்.  இதன் மூலம் ஆரோக்கியமான திசுக்களில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்கலாம்.  மூச்சை அடக்கி நிறுத்தி வைத்திருப்பதற்கான அவசியத்தையும், நோயாளி அசையாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகளையும் இப்புதிய சாதனம் தேவையற்றதாக ஆக்கிவிடுகிறது.  இதனால் நோயாளிக்கு ஏற்படும் அசௌகரியமும் குறைக்கப்படுகிறது. இதன்  ஒட்டு மொத்த அனுபவமும் நோயாளிக்கு மேம்படுத்தப்படுகிறது.  கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை போன்ற பல்வேறு இடங்களிலுள்ள புற்று நோய் கட்டிகளை இலக்காக கொண்டு ஒரே நேரத்தில் கதிர்வீச்சு சிகிச்சையை வழங்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.  135 செ.மீ. என்ற அதிகபட்ச நீளமுள்ள சிகிச்சை பகுதிக்கு எவ்வித இடைவேளைகளும் இல்லாமல் இதன் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.  நுரையீரல்கள், கல்லீரல் மற்றும் புராஸ்டேட் சுரப்பி ஆகியவற்றில் நகரும் புற்று நோய் கட்டிகளை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ் நேரத்திலேயே கண்டறிந்து அவைகளுக்கு சிகிச்சையளிக்கலாம்;. 

MMHRC – ல் இப்புதிய சாதனம் தொடங்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் 'பர்;ப்பிள் மூவ்மென்ட்' என அழைக்கப்படும் ஒரு நிகழ்வு நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பொதுமக்கள் மத்தியில் டோமோதெரபி என்ற இந்த சிறப்பான சிகிச்சைமுறை பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ரேஸ்கோர்ஸ் சாலையிலிருந்து, MMHRC -க்கு 400-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !