மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு) நிகழ்ச்சி மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக மதுரை நரிமேடு ஓ சி பி எம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது

Madurai Minutes
0


மதுரை

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு) நிகழ்ச்சி மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக மதுரை நரிமேடு ஓ சி பி எம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.வெங்கடேசன் (மதுரை பாராளுமன்ற உறுப்பினர்), கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவிகளின் நலனிற்காகவும் அவர்களின் கல்வி இன்னையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காக மதுரை மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை சேர்ந்த 214 மாணவிகளுக்கு CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு) மலபார் குழுமம் சார்பாக மொத்தம் சுமார் ரூபாய்.-19.14.000/- (பத்தொன்பது இலட்சத்து பதினான்கு ஆயிரம் ரூபாய்), மதிப்பிலான காசோலையை மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருமதி.கார்த்திகா (முதன்மை கல்வி அலுவலர் மதுரை), திருமதி.மேரி (ஓ சி பி எம் பள்ளி தலைமை ஆசிரியை), திரு.நிஷாந்த் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை விஷால் டி மால் கிளை இணை தலைவர்), திரு.சிஹாபுதீன் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை மேல மாசி வீதி கிளை இணை தலைவர்). திரு.ரஞ்சித் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை விஷால் டி மால் கிளை இணை வர்த்தக மேலாளர்), ஆகியோர் உடனிருந்தனர். இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள் இதரகாரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !