மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: கட்சி கொடியேற்றி மாவட்ட செயலாளர் மணிமாறன் மரியாதை

Madurai Minutes
0

 

மதுரை,
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூர், கோவிலாங்குளம், செல்லம்பட்டி, வாலாந்தூர் உள்ளிட்ட இடங்களில்  அமைக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா நினைவாக கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு கருமாத்தூரில் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி மரியாதை செய்தார். தொடர்ந்து  செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்றத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த

நினைவு கொடி கம்பத்தில் கொடியேற்றினார்.
பின்னர் செல்லம்பட்டி, வாலாந்தூர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த நினைவு கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 
 விழாவிற்கு வருகைதந்த மாவட்ட செயலாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் பிவி.கதிரவன், செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமன், வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன், சேடபட்டி ஒன்றிய சேர்மன் ஜெயச்சந்திரன், உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ்ஓஆர்.தங்கபாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்விஎஸ்.முருகன், மேற்கு ஒன்றிய  செயலாளர் எம்.பி.பழனி, வாலாந்தூர் கனேஷ்குமார், மதுரை மண்டல தகவல்தொழில்நுட்பபிரிவு அணி பொறுப்பாளர் பாசபிரபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு, செல்லம்பட்டி நிர்வாகிகள் ஜெயபிரபு உள்ளிட்ட பலர் பலந்து கொண்டனர். 


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !