நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Madurai Minutes
0


மதுரை 

எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

 ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்,

 கல்வியின் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம், பெற்றோர்களுக்கு மரியாதை அளித்தல், பிறருக்கு உதவி செய்தல் முதலியன பற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் குடியரசு தின விழா நிகழ்விற்கு தேவையான இனிப்புகளை ஆசிரியை அருவகம் அவர்களிடம் வழங்கினார். மாணவ மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அனைவருடனும் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசிரியை அம்பிகா தொகுத்து வழங்கினார். ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் அனுசியா, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் விழாவில் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !