அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சி கரூரில் இன்று துவங்கியது

Madurai Minutes
0


 மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மண்டல மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்த புகைப்படக் கண்காட்சியை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு லியாகத், துவக்கி வைத்தார்.

புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின், நிகழ்ச்சியில் பேசிய திரு. லியாகத், பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். அத்தகைய தியாகங்களை மாணவர்கள் மனதில் கொண்டு, உயர்ந்த லட்சியத்துடன் செயல்பட்டு, முன்னேறி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல இயக்குநர் திரு. ஜெ. காமராஜ், மாணவர்கள் கல்வி கற்கும் போதே நம் எதிர் கால திட்டத்தை முடிவு செய்ய வேண்டும் என்றார்.


நமது சூழ்நிலைகள் மாறினாலும் நமது எதிர் கால நோக்கத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

மத்திய மக்கள் தொடர்பகத்தின் திருச்சி கள விளம்பர அலுவலர் திரு. கே. தேவி பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார்.

 கரூர் சித்த மருத்துவர் காமராஜ் மற்றும் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கெளசல்யா தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 தஞ்சாவூர் கள விளம்பர உதவியாளர் ரவிந்திரன் நன்றியுரையாற்றினார்.

    நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !