செக்கானூரணியில் பாலகணபதி கோவில் கும்பாபிஷேகம்

Madurai Minutes
0


 செக்கானூரணி 

செக்கானூரணி அருகே உள்ள கொ.பாறைப்பட்டி சடைச்சி வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பால கணபதி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்றது. இன்று காலை கடம் புறப்பாடாகி கோபுரத்தை வலம் வந்து அர்ச்சகர்கள் சக்தி கனி அன்னை உபாசகர், காளிராஜ் ஆகியோர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !