ஜேஇஇ மெயின்ஸில் ஆகாஷ் பைஜூஸ் மதுரை மாணவர்கள் சாதனை

Madurai Minutes
0

மதுரை ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 6 மாணவர்கள் கூட்டு நுழைவத் தேர்வு(ஜேஇஇ) 2023-ன் முதல் கட்ட தேர்வில் வி.மிதுன்  99.97 சதவிகிதத்துடனும், ஐஸ்வர்ய லஷ்மி 99.71 சதவிகிதத்துடனும், ஆர்.கே.சஞ்சய் 99.65 சதவிகிதத்துடனும், எஸ்.பொன் அனிதா 99.17 சதவிகிதத்துடனும், லிபின்கிஷோர்.ஜி 99.06 சதவிகிதத்துடனும், முகில்.எம் 99.04 சதவிகிதத்துடனும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி பிப்ரவரி 6ஆம் தேதி அறிவித்தது.

உலகின் கடினமான நுழைவுத் தேர்வாக கருதப்படும் ஐஐடி ஜேஇஇ- தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் ஆகாஷ் பைஜூஸ் கிளாஸ்ரூம் திட்டத்தில் சேர்ந்தனர் . ஜேஇஇ-யில் சிறந்த சதவீத மதிப்பெண் எடுத்து முதலிட பட்டியலில் அவர் நுழைந்ததற்கு கருத்துகளை புரிந்துகொள்வதில் அவர் எடுத்த முயற்சிகள் மற்றும் அவரது கற்றல் அட்டவணையை கடுமையாக பின்பற்றியதே காரணம். மாணவர்களுக்கு ஆகாஷ் பைஜூஸ் ஐஐடி-ஜேஇஇ பயிற்சியை பல பாட வடிவங்களில் வழங்குகிறது.  அதன் ஐடியூட்டர் பதிவு செய்யப்பட்ட வீடியோ விரிவுரைகளை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் அவர்கள் தவறவிட்ட வகுப்புகளை கவனித்து கொள்ளலாம். பயிற்சி தேர்வுகள் உண்மையான தேர்வு காட்சியை விளக்கி தேர்வை எதிர்கொள்வதில் நம்பிக்கையையும் அளிக்கிறது.

மாணவர்கள் கூறுகையில் “ஆகாஷ் இன்ஸ்டிடியூட் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆனால், இன்ஸ்டிடியூட்டில் பொருளடக்கம் மற்றும் பயிற்சி எடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை புரிந்துகொண்டிருக்க மாட்டோம்” எனத் தெரிவித்தனர்.

மாணவர்களை வாழ்த்தி பேசிய ஆகாஷ் பைஜூஸின் மண்டல இயக்குனர் தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், “மாணவர்களின் முன்மாதிரியான சாதனைக்காக நாங்கள் அவர்களை வாழ்த்துகிறோம். ஜேஇஇ முதன்மை தேர்வு 2023 முதல் அமர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 8.6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதிக சதவீத மதிப்பெண் பெற்ற இந்த சாதனை அவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது. மாணவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !