தமிழ்நாட்டில் முதன்முறையாக இதய நோய் இருந்த 58 வயது பெண்ணை காப்பாற்ற ஸ்டெல்லட் டிரைவன் LOT ICD என்ற புதுமையான முறையில் சிகிச்சையளித்த மீனாட்சி மிஷன் மருத்துவமனை*

Madurai Minutes
0

 

மதுரை, 58 வயதான பெண்மணியின் உயிரை காப்பாற்ற ஸ்டெல்லர் டிரைவன் LOT ICD என அழைக்கப்படும் ஒரு புதுமையான சிகிச்சையை தமிழ்நாட்டில் முதன் முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் (MMHRC) திறன்மிக்க மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன், இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர். செல்வமணி , டாக்டர். கணேசன், டாக்டர். சம்பத்குமார் , ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் டாக்டர். செல்வமணி அவர்கள் இந்த செயல்முறை குறித்து அனைவருக்கும் புரியும்படி விளக்கினார்.


இதயத்தின் இடது கீழறை கோளாறுடன் (LV dysfunction) கடந்த 5 ஆண்டுகளாக ஓய்வில் இருக்கும் போதுகூட சுவாச பிரச்சனையால் இப்பெண் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதய செயலிழப்புக்காக அதிகபட்ச மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும், ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு தடவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுவது இவருக்கு அவசியமாக இருந்தது. கடுமையான இதய செயலிழப்பு பிரச்சனையோடு இந்நோயாளி MMHRC-க்கு வருகை தந்தார். அப்பெண்ணின் இதயத்தை பரிசோதித்த பிறகு, Left bundle branch pacing–optimized implantable cardioverter-defibrillator (LOT-ICD) for potential Cardiac resynchronization therapy (CRT) implant to wide QRS with Left bundle branch block (LBBB) morphology என்ற சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. 


இந்த பெண்ணின் இதய பாதிப்பு குறித்து பேசிய *MMHRC-யின் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். S. செல்வமணி,* “இதயத்தின் இடது கீழறையில் கணிசமான செயலிழப்பு இருப்பதால் defibrillator என்பதை இந்நோயாளிகளுக்கு நாங்கள் பொருத்த வேண்டியிருக்கிறது. மேலும் திடீர் மாரடைப்பு அவர்களுக்கு ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்வதும் அவசியமாகிறது. எனவே இந்நோயாளிக்கான சிகிச்சையில் இடது இதயக்கீழறையை நேரடியாக தூண்டிவிடும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். நீண்ட நேரம் நீடிக்கும் மருத்துவ செயல்முறையை அவசியமற்றதாக ஆக்கியதன் மூலம் குறைவான ஹர்டுவேரை கொண்டு சிறப்பான சிகிச்சை விளைவுகளை எங்களால் பெற முடிந்தது. LV லீடு சேர்க்கை இல்லாமல் ஒரு பெண்ணின் QRS குறுகியிருந்த காரணத்தால் சிறப்பாக திருத்தியமைக்கப்பட்ட ஒரு இரட்டை சேம்பர் கொண்ட ICD (LOT-ICD இடது இதயக்கீழறை) இப்பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. கட்டுப்பாடு அமைப்பின் வழியாக இடது கீழறையின் நேரடி தூண்டல் வழியாக ஒரு LV லீடு சேர்க்கை இல்லாமலேயே இதயத்தின் ஒத்திசைவை நீக்க இம்மருத்துவ செயல்முறை உதவியது” என்று கூறினார்.


உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செலுத்தப்படும் உணர்விழப்பு மருந்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இம்மருத்துவ செயல்முறை நிறைவடைவதற்கு ஏறக்குறைய 2 மணி நேரம் எடுத்தது. எவ்வித சிக்கல்களும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த செயல்முறைக்குப் பிறகு 2 நாட்கள் கழித்து இந்நோயாளி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இயல்பான அனைத்து செயல்பாடுகளையும் இவர் இப்போது வழக்கம் போல மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழுவால் வடிவமைக்கப்பட்ட இந்த நுட்பமான சிகிச்சை திட்டமானது நோயாளிக்கு பயனளிக்கும் சிறப்பான சிகிச்சை விளைவுகள் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறது. செய்தியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வின்போது இப்பெண்மணிக்கு சிகிச்சையளித்த இதயவியல் துறையின் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !