உணவு பாதையில் ஏற்பட்ட புற்றுநோயை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை

Madurai Minutes
0


 மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் வாலிபரின் உணவு பாதை புற்றுநோயை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. இந்த சிகிச்சை குறித்து செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா பேசுகையில், 

மதுரையை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உணவு விழுங்க முடியாமல் சிரமப்பட்டார்.அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் உணவு குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. "உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது ஓபன்சர்ஜரி என்னும் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் போது, நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் அதிக வலி, நுரையீரலில் நோய்த்தொற்று மற்றும் பல சிரமங்கள் ஏற்படுவது சகஜம். அவற்றை தவிர்க்கும் வகையில் இவருக்கு VATS (Video Assisted Thoracoscopic Surgery) எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த தினமே அவர் வலியின்றி மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் தனது அன்றாட வேலைகளை சகஜமாக செய்ய முடிந்தது. மேலும் அறுவை சிகிச்சை செய்த ஒரே வாரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போலோ நிறுவனத்தின் மதுரை மண்டல அப்போலோ சீஓஓ நீலகண்ணன் பேசுகையில், "மதுரை அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான முழுமையான மருத்துவ குழுவின் கண்காணிப்பில் சிறப்பான சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அதிநவீன கருவிகள் மூலம் நோயாளிகள் பயன் அடையும் வகையில் கொண்டு வரப்பட உள்ளன. இதனால் தென் தமிழக புற்று நோயாளிகள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை அருகிலேயே பெறமுடியும்" என்று கூறினார்.

பேட்டியின் போது மருத்துவக்குழு நிபுணர்கள் டாக்டர் சேகர், டாக்டர் ராஜேஷ் பிரபு, டாக்டர் சுரேஷ் குமார், டாக்டர் ஐயப்பன், டாக்டர் கணேஷ், டாக்டர் பிரவீன் குமார், டாக்டர் பிரபு மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே.மணிகண்டன், செயல்பாடுகள் பொதுமேலாளர் டாக்டர் நிக்கில் திவாரி மற்றும் பிரேம் டேனியல் (புற்றுநோய் பிரிவு) ஆகியோர் உடனிருந்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !