திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Madurai Minutes
0


 திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை கிராமம் பில்லம நாயக்கன்பட்டியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீஅங்காளஈஸ்வரி அம்மன், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீ வடுகச்சியம்மன் , ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு ஆலய திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா என்று அழைக்கப்படும் புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முதல் நாள் மங்கல இசை முழங்க கணபதி பூஜை, கணபதி ஹோமம், அம்மாள் மஹாலட்சுமி ஹோமம் மற்றும் நவகிரஹ ஹோமம் பூர்ணாகதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கல இசை முழங்க கிராம தெய்வங்களுக்கும், ஊர் தெய்வங்களுக்கும் கனி வைத்து பூஜை புண்ணிய தீர்த்தம் மற்றும் முளைப்பாரி வான வேடிக்கையுடன் அழைத்து வரப்பட்டது. பின்னர் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்ணிய வாஜனம் ,வாஸ்து சாந்தி பிரவேச பலி மிருத்சிங் கரணம், அங்குரார்பணம், ரக் ஷா பந்தனம், கும்பம் அலங்காரம் ,கும்ப யாக சாலைக்குள் நுழைதல், வேதிகா பூஜை (எல்லாம் வல்ல ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீ வடுகச்சியம்மன் பரிவார தெய்வங்களை திருக்குடத்திற்குள் எழுந்தருள செய்தல்) கனிவகை மூலிகை வேள்வி நிறையவியளித்தல், பேரொளி வழிபாடு, மகா பூர்ணாகதி, மகா தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.இரண்டாம் நாள் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம் ,புண்ணியாகவாஜனம், பிம்பசுக்தி ஸ்பரிஷாகதி எல்லாம் வல்ல ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ வடுகச்சியம்மன், பரிவார தெய்வங்களுக்கு உயிர் ஊட்டுதல், கோ - பூஜை கன்னாயா பூஜை, சுமங்கலி பூஜை, கனி மூலிகை வேத பாராயணம், அஸ்திர ஹோமம் 108 மூலிகை ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எல்லாம் வல்ல ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன், ஸ்ரீபேச்சியம்மன் ஸ்ரீவடுகச்சியம்மன், ஸ்ரீ விநாயகர், நவகிரஹ பரிவார தெய்வங்களுக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும் ,தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் மூலஸ்தானத்தில் அபிஷேகம் அலங்காரம் மலர்களால் போற்றி வழிபாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேத்திற்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் சிச்சா ,திரைப்பட நடிகை தாரணி, நடிகர் வையாபுரி, சின்னாபட்டி அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் வி.சி.எம். டிரஸ்ட் நிறுவனர் 

சி.ரஞ்சித்குமார் சார்பாக ஸ்ரீஇன் வின் இன்னிசை கச்சேரி மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய் டிவி புகழ் மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர் நாராயணன் சார்பாக மதுரை சுரபி நடன நாட்டிய நிகழ்ச்சி மற்றும் கிராமிய தெம்மாங்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இவ்விழாவில்  

ஸ்ரீஅங்காளஈஸ்வரி கோவில் பங்காளிகள் மற்றும் திருப்பணி குழுவினர், பில்லமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, அய்யக்குட்டியபட்டி, பூச்சிநாயக்கன்பட்டி, குடைப்பாறைப்பட்டி ஆகிய அனைத்து ஊர் பங்காளிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !