ஆண்டிபட்டி நகர் அருள்மிகு காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம்.

Madurai Minutes
0

  


ஆண்டிபட்டி -

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 10 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது .

ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதி கடந்த காலங்களில் முட்புதர் சூழ்ந்த பகுதியாக இருந்தது. ஊருக்கு நடுவில் ஒரு திரிசூலத்தை வைத்து காளியம்மனாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருவார்கள். ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் இந்த காளியம்மன் கோவில் தான் தாய் கோவில் என்று அழைக்கப்படுவதால், இந்த கோவிலில் திருவிழா கும்பிட தொடங்கிய பின்பு தான் மற்ற கோவில்களில் கும்பிடுவது என்பது சிறப்பு அம்சமாகும். 

   


இந்த காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் டிசம்பர் மாதம் புனரமைப்பு பணிக்காக பாலாலய நிகழ்வு நடைபெற்று புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அம்மனின் கிழக்கு மற்றும் வடக்கு கருவறைகள் புதிதாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோவிலில் உள்ள தூண்கள் மெருகேற்றப்பட்டது. தொடர்ந்து தரைத்தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோவிலுக்கு ஆகம விதிகளின்படி பெரிய கதவு நிலைகள் பொருத்தப்பட்டுள்ளது. பரிவார தெய்வங்களுக்கு அந்தந்த சன்னதிகள் புது வடிவம் பூண்டுள்ளது. சிறப்பு வாய்ந்த காளியம்மன் கோவில

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !