பத்து லட்சம் விதைகள் நடுவதை வலியுறுத்தி மினி மாரத்தான் மேயர், சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்

Madurai Minutes
0

 


மதுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் 10 லட்சம் மர விதைகள் நடுவதை வலியுறுத்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருபாலர் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. போட்டியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, சின்னத்திரை பிரபலங்கள் ரக்சிதா, ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாரத்தான் ஆரப்பாளையத்தில் தொடங்கி குரு தியேட்டர், காளவாசல், ஜெயில் ரோடு வழியாக ஆரப்பாளையம் ரவுண்டானாவில் முடிவடைந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆண் பெண்களுக்கு பயோனியர் ஆட்டோமொபைல்ஸ் சார்பில் நினைவுப்பரிசு, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இயக்குநர் விருமாண்டி, ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி தனபால் ,கனடாவைச் சேர்ந்த ஜில்கார்ஸ், ரேடியோ மிர்சி பாண்டி செல்வி, துபாய் குரு, குருபாய், கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர்

இத்ரீஸ் , தமிழ் வனம் அமைப்பின் நிர்வாகிகள் சங்கரபாண்டி, பகவான், காவிரியில், நூருல்லா, சுப்பையா, ஆனந்தகுமார், அன்னவயல் காளிமுத்து, மரம் துரை, நல்லோர் வட்ட அமைப்பாளர்கள், சேது, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி, அரபிந்தோ மீரா பள்ளி என்.எஸ்எஸ். மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக 10 லட்சம் விதையிடும் நிகழ்வினை சென்னையில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரையில் விதை நடும் பணியை மேயர் இந்திராணி, சின்னத்திரை பிரபலங்கள் ரக்சிதா, ஸ்டாலின் ஆகியோர் நட்டு தொடங்கி வைத்தனர். 


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !