சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் சாலை கண்காட்சியில் மதுரைவாசிகள் செளராஷ்ட்ராவின் வரலாற்றைக் கொண்டாடினர்

Madurai Minutes
0

 


மதுரை, 

மதுரை நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட “சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்” சாலை கண்காட்சியில் உள்ளூர் வாசிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். காசி சங்கமம் போன்று குஜராத் மாநிலம் மற்றும் மத்திய அரசு இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி சௌராஷ்டிராவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள கலாச்சார உறவைக் கண்டறியவும், உறுதிப் படுத்தவும் மற்றும் கொண்டாடவும் உதவியது. மதுரை நகரில் நடந்த சாலைக் கண்காட்சியின் போது, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் 15 நாள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் விளக்கினர்.


சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம், 3,000 பங்கேற்பாளர்கள் சௌராஷ்ட்ரிய தமிழர்களின் வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சௌராஷ்டிரர்களின் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றை காணும் வாய்ப்பை பெறுவார்கள். காசி தமிழ்ச் சங்கமத்தைப் போன்று இந்த நிகழ்ச்சி இந்திய கலாச்சார ஒற்றுமையை எடுத்துக் காட்டும். ஒரு சமூகம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த விதம் மற்றும் நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்புகள் பற்றிய சொல்லப்படாத வரலாறுகளை இது விவரிக்கும்.


மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய குஜராத் மாநில சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் மருத்துவக் கல்வி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, சட்டம், நீதி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஸ்ரீ ருஷிகேஷ் பாய் படேல், “சௌராஷ்டிர தமிழ் சங்கமமானது சௌராஷ்டிர தமிழர்கள் மீது கவனம் செலுத்தும். மதுரை நகரில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சௌராஷ்டிர தமிழர்கள் தனித்துவமாக வாழ்ந்து தமிழ் மற்றும் குஜராத் பாரம்பரியங்களை கடைப்பிடித்து வருகின்றனர். சௌராஷ்டிராவினரைப் பற்றி அறியாத வாழ்க்கையைக் காண குஜராத் மற்றும் யூனியன் அரசாங்கத்தின் இந்த திட்டம் ஒரு சிறந்த முயற்சியாகும். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சௌராஷ்டிரியர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பளிக்கும்” என்றார்.


செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, குஜராத் மாநில தொழில்துறை, சிவில் விமானப் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பல்வந்த் சிங் ராஜ்புத், "தமிழ்நாட்டிற்கும் குஜராத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். ஜவுளி, பட்டு நெசவு கலை அல்லது கோவில்கள் மற்றும் கட்டிடக் கலைகளுடன் நெருங்கிய தொடர்பு மற்றும் தனித்துவமான கலாச்சார ஒருமைப்பாடு உள்ளது. மேலும் சௌராஷ்டிர தமிழர்கள் மதுரை போன்ற பகுதிகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்பது தமிழ்நாடு மற்றும் குஜாராத்தில் உள்ள செளராஷ்ட்டிரா பாரம்பரியத்தை பாதுகாக்கும் சமூகங்களை மதிக்கும் பாரம்பரியங்களின் சங்கமம் ஆகும்” எனத் தெரிவித்தார்.


மதுரை நகரமானது, மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சௌராஷ்டிர தமிழ் குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய அரை மில்லியன் சௌராஷ்டிரத் தமிழர்கள் மதுரையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒரு தனித்துவமான பேச்சு வழக்கு மற்றும் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். இது தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவிற்கு பொதுவானதாக உள்ளது. இவர்களது சமயப் பழக்க வழக்கங்களும் சிந்தனைகளும் பழங்காலத்திலிருந்தே இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் உள்ளது. எனவே, சமூகத்தை போற்றும் அரசின் திட்டம், மதுரைவாசிகளை கவர்ந்துள்ளது.


சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்ற திட்டமானது ஒரு தசாப்தத்திற்கு முன்பு மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் அடித்தளம் போடப்பட்டது. 2006ஆம் ஆண்டு அவர் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, அவரது தலைமையில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு செளராஷ்டிரா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்றது. சௌராஷ்டிரா பல்கலைக்கழகம் மற்றும் சௌராஷ்டிரா வர்த்தக சம்மேளனம் இணைந்து மதுரையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு திட்டமும் கருத்தரிக்கப்பட்டது. ஸ்ரீ நரேந்திர மோடி முன்னிலையில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்ட சௌராஷ்டிர சமூக சங்கமம் - கிட்டத்தட்ட 50,000 சௌராஷ்டிரர்கள் ஒன்றிணைந்த நிகழ்வைக் கண்டது.


ஒரே குடும்பம், ஒரே பூமி, ஒரே எதிர்காலம் என்று பொருள்படும் ஒற்றுமையை வசுதைவ குடும்பம் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடையாளம் காட்டியுள்ளார். உலகெங்கிலும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முடிவெடுக்கும் இலக்குகளை ஊக்குவித்து வருகிறது. குஜராத் மாநில அரசு சென்னை மற்றும் மதுரையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சாலைக் காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. 

செளராஷ்ட்ரா தமிழ் சங்கமமானது கலாச்சாரம் மற்றும் கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வேயின் ஆதரவைப் பெற்றுள்ளது. தஞ்சாவூர், சௌராஷ்டிரா மற்றும் ஜூனாகத் போன்ற இரு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும் பார்வையாளர்களுக்கு கற்றல் அனுபவத்தை வழங்குவதில் பங்களித்துள்ளன. கலை, சிற்பம், உணவு, பாரம்பரியம், வணிகம், கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிராவிற்கு இடையே உள்ள எண்ணற்ற தொடர்புகளை இத்திட்டம்  எடுத்துக் காட்டும். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஸ்ரீ பூபேந்திரபாய் படேல் தலைமையிலான குஜராத் அரசு ஜவுளி மற்றும் கைத்தறிகளை காட்சிப் படுத்துவதற்கான கண்காட்சிகள், கைவினைஞர்களின் கூட்டங்கள், வணிக நிகழ்வுகள், விவாதங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்தவுள்ளது.


மதுரை மற்றும் சென்னையின் வெற்றிக்குப் பிறகு, குஜராத் அரசு சௌராஷ்டிர தமிழ் சங்கமம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியான சாலைக்காட்சிகளை நடத்தியது. திண்டுக்கல், பரமக்குடி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த சாலைக் காட்சிகள் செளவுராஷ்ட்ரா தமிழர்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !