கோர்ட்யார்டு பை மேரியட் நிறுவனம் நடத்தும் நம்ம வீட்டு கல்யாணம் காட்சிமை

Madurai Minutes
0

மதுரையில் உணவு விடுதிகளில் சிறந்து விளங்கும் கோர்ட்யார்டு பை மேரியட் மதுரை நிறுவனமானது மதுரையில் முதன் முறையாக சிறந்த செழுமைமிக்க பாரம்பரிய திருமண வைபவங்களின் சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாகவும், மற்றும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சம்பிரதாயங்கள் பற்றிய தெளிவான விபரங்களுடன் கூடிய ஒரு காட்சிமை நிகழ்ச்சியை மதுரையில் முதன் முறையாக ”நம்ம வீட்டு கல்யாணம்" என்ற தலைப்பில் வரும் 2023 ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதிகளில் சிறப்பான முறையில் நடத்த இருக்கின்றது.

மதுரையில் எதிர்வரும் திருமண பருவகாலங்களை முன்னிட்டு, கோர்ட்யார்டு பை மேரியட் நிறவனமானது வழக்கமான முற்றிலும் ஆடம்பர திருமண வைபவங்களை மக்களுக்கு காட்சிமை படுத்த மதுரையில் முதன் முறையாக "நம்ம வீட்டு கல்யாணம்” என்ற தலைப்பில் ஒரு காட்சிமை நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ளது. மேற்படி கோர்ட்யார்டு பை மேரியட் நிறுவனத்தில் நடத்தப்படும் இந்த நம்ம விட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சி மதுரை மக்களுக்கு திருமண வைபவங்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு கொண்டதாக அமையும் என்பது உறுதி.

கோயமுத்தூர் மாநகரில் ஒரு தசாப்த காலத்திற்கு மேல் அனுபவமிக்க நிறுவனமான மார்க் 1 ஈவன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் 9-ஆவது நிகழ்சியாகவும் மதுரையில் அறிமுக காட்சியாகவும் இந்நிகழ்ச்சி ஏற்பட உள்ளது. வெட்டிங் வைப்ஸ் மெகா எக்ஸ்போ நிகழ்ச்சியானது 50க்கும் மேற்பட்ட பிராண்டுகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அமைந்து மதுரை மக்களுக்கு வரும் 29 மற்றும் 30 ஏப்ரல் 2023 ஆகிய இரு தினங்களில் தங்களின் சிறந்த திருமணம் சார்ந்த சேவை விபரங்களை அளிக்க இருக்கின்றது.

மேற்படி இரு தினங்களில் நடத்தப்படும் திருமண பற்றிய காட்சிமை நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களின் திருமண கணவுகளுக்கு ஒரு தீர்வாக தங்களின் இல்ல திருமணங்களுக்கு தேவையான ஆடையலங்காரங்கள், அணிகலன்கள், ஒப்பனை பொருட்கள், திருமண திட்டமிடல், திருமண புகைப்பட நிறுவனங்கள், மற்றும் பல திருமணம் சம்பந்தமான அரிய விபரங்கள் அடங்கிய ஆடம்பர திருமண காட்சிமை நிகழ்சியாக அமைய இருக்கின்றது.

மேற்படி நம்ப வீட்டு கல்யாண காட்சிமை நிகழ்ச்சியில் நமது கோாட்யாட்டு பை மேரியட் நிறுவனமானது முற்றிலும் மக்களுக்கு சேவை அர்பணிப்புக்காக பிரத்தியேகமான ஒரு ஸ்டால் அமைத்து அதில் பொதுமக்களின் திருமணம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையிலும் மற்றும் மேற்படி நிறுவனத்தில் அமைந்துள்ள சுமார் 30,000 சதுர அடியில் அமைந்துள்ள திருமண மஹால் கூடம், மேல்மாடி திறந்தவெளி தோட்டம் மற்றும் புல்வெளி தரை, மிகவும் நவீன படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் நவீன உபகரணங்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் அளிக்க உள்ளது.

மேற்படி நம்ம வீட்டு கல்யாணம் என்ற காட்சிமை நிகழ்சியானது மதுரை அனைத்து வர்கத்தினருக்கும் பொதுவானது மேலும் நமது நிறுவனம் பொதுமக்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகளுக்கு விருந்து கூடம் மற்றும் சமையல் அமைப்புகளுக்கு தலா ரூ.1,000-ல் இருந்து ஆடம்பர எல்லை வரை அனைத்தும் வசதி செய்து தரப்படும்.

மேற்படி காட்சிமை நிகழ்ச்சியானது அனைவருக்கும் பொதுவானது மற்றும் முற்றிலும் அனுமதி இலவசம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !