மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் 'அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ் ' அறிமுகம்

Madurai Minutes
0

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கத்தினாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் கட்டாயத்தினாலும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்கள் போன்ற தொற்று இல்லாத நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது, இதனால் இந்தியாவில் 70 சதவீதமான மரணங்களுக்கு இதுவே மூல காரணமாக அமைகிறது. புள்ளிவிவரத்தின் படி பத்தில் ஒரு இந்தியர் இந்த தொற்று இல்லாத நோயால் அதாவது Non- Communicable diseases ஆல் பாதிக்கப்படுபவர் என்றும், 25-55 வயது  உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிகிறது, இது தொடர்ந்தால் 2030ல் உலகம் 30 ட்ரில்லியன் டாலர் இறப்பையும் 36 மில்லியன் மக்கள் இந்த Non- Communicable diseases- இல் இறப்பார்கள் என்றும், இதற்கான தீர்வை மிகவும் விரைவாக எடுக்க வேண்டும் என்றும் World Economic Forum  எச்சரிக்கை விடுத்துள்ளது.


எனினும் நமக்கு நல்ல செய்தியாக அமைவது இதுபோன்ற நோய்களை சரியான நேரத்தில் கண்டறிந்து  அதற்கான சிறந்த சிகிச்சையை எடுப்பதன் மூலம் நோய்களை முற்றிலும் குணமாக்க வாய்ப்புள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்தத் தொற்று இல்லாத நோய்களின் காரணம் தனிநபரின் வாழ்க்கை முறையை, பழக்கவழக்கங்கள், உடல் அமைப்பு சார்ந்து இருப்பதால், சிகிச்சை முறையும் தனி நபருக்கு ஏற்றார் போல் (Personalized Plan) வடிவமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 


இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, செயல் துணைத் தலைவர் அப்போலோ குழுமங்கள் கூறுகையில் “40 வருடங்களுக்கு முன்பே அப்போலோ மருத்துவமனை, இந்தியாவில் ஹெல்த் செக்கப் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக் திட்டங்களை அறிமுகம் செய்து முன்னோடியாக திகழ்கிறது, 20 மில்லியன் ஹெல்த் செக் செய்து சாதனை படைத்த நிலையில் அப்பல்லோ ஹாஸ்பிடல் தனி மனிதனின் வாழ்வாரத்தை முன்னேற்றுகிறது என்றும் இந்த Apollo Health Check on Wheels, தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தங்கள் உடல் நலனை சீராக வைத்துக் கொள்வதற்கும் நோய்களை முன்பே கண்டறிந்து சிறந்த சிகிச்சையை விரைவாக மேற்கொள்வதற்கும், எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை கண்டறிய பெரிதும் உதவியாக திகழ்கிறது என்று கூறினார்.”


திரு நீலக்கண்ணன், மதுரை மண்டல முதன்மை நிர்வாக இயக்குனர் கூறுகையில்“ ப்ரோ ஹெல்த் ப்ரோக்ராம் (Prohealth Program) தனி நபருக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனி நபரின் உடல் ஆரோக்கியத்தை ஆய்வு செய்து எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களுக்கு முன் அறிவிப்பாக அமைவது மட்டுமில்லாமல் அதற்கு துல்லியமான பரிசோதனைகளும், மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைக்கும் தொடக்கப் புள்ளியாக அமைகிறது என்று கூறினார்.”


டாக்டர் பிரவீன் ராஜன், JDMS கூறுகையில் “Apollo Health Check on Wheels, ஒரு நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம் என்றும் தங்கள் உடலை தங்களிடத்திலே பரிசோதித்துக்கொள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோமெட்ரி, ECHO, ஈசிஜி, பிஎஃப்டி, ஈஎன்டி செக் அப், கண் பரிசோதனை, அடிப்படை பரிசோதனையான (உயரம், எடை, பிபி, நாடித்துடிப்பு), இரத்த மாதிரி சேகரிப்பு போன்ற முழு உடல் பரிசோதனைகள் செய்ய தேவைப்படும் அனைத்து வசதிகளும் உள்ளது என்று கூறினார்.”


மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலின் மகாகும்பாபிஷேகம் 25 மே 2023 அன்று நடைபெற்றது. மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் மஹோத்ஸவ விழாவைத் தொடர்ந்து மகாகும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது. 25 மே 2023 அன்று நடந்த மகாகும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி மதுரைக்கு வருகை தந்து, “Apollo Health Check on Wheels” பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ஆன்சைட் ஹெல்த் செக் நடத்த, மதுரை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் “Apollo Health Check on Wheels” பேருந்து செல்லும்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் மூத்த மருத்துவ சேவைகள், அப்போலோ குழுமங்கள், டாக்டர் ரோகினி ஸ்ரீதர், மார்க்கெட்டிங் மண்டல ஜி.எம் - மணிகண்டன்.கே, அப்போலோ மதுரை - யூனிட் ஹெட், டாக்டர் நிகில் திவாரி, ஜி.எம் ஆபரேஷன்ஸ் திருமதி மற்றும் என்.கற்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !