நாகமலை புதுக்கோட்டையில் இறகுப்பந்து போட்டி: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

Madurai Minutes
0

 


மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடியார் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

போட்டியை தொடங்கி வைக்க வருகை புரிந்த எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவிற்கு சிறுவர் சிறுமியர் மலர் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து  போட்டியை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இறகுப்பந்து போட்டியானது  ஜூனியர், சீனியர், ஆடவர் ஒற்றையர்.,ஆடவர் இரட்டையர், களப்பு இரட்டையர்கள் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும்., கோப்பைகளும்., வழங்கப்படுகிறது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர்


ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பி.என்.எஸ். அகடமி நிறுவனர் நீதி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் ராஜ்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !