மதுரை முன்னாள் தொண்டர் அணி அமைப்பாளர் சேகர் உடல் நலம் குறித்து துரை வைகோ விசாரித்தார்

Madurai Minutes
0


மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் தொண்டர் அணி அமைப்பாளரும் தமிழகமெங்கும் கழகத்தின் மாநாடு, பொதுக்கூட்டங்களில் கட்சி வண்ண மணிக் கொடி வகுப்பினை நேர்த்தியுடன் அமைத்துத் தரும் கொடி சுந்தர் அவர்களின் சகோதரருமான சேகர் கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 நமது சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு. பூமிநாதன் உடன் இன்று (11.05.2023) அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சேகர் குடும்பத்தினரிடம் உடல் நலம் பற்றி கேட்டறிந்தேன்.

 ராஜாஜி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி திருமதி ஶ்ரீ லதா அவர்களிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தேன்.

 மருத்துவமனை தலைவர் திரு. இரத்தினவேல் அவர்களிடம், எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் மருத்துவமனை நிர்வாகம் சேகருக்கு சிறப்பு கவனம் செலுத்தி உயரிய சிகிச்சை தருமாறு தங்களிடம் கேட்டுக்கொள்ள சொன்னதையும் மருத்துவமனை தலைவரிடம் தொலைபேசி மூலம் பேசினேன்

 உடன் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் எம். மார்நாடு, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். முனியசாமி இருந்தனர்

 கழக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மகபூப் ஜான், மாவட்ட பொருளாளர் சுருதி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ஜெயச்சந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் P.G. பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரன், பகுதி செயலாளர்கள் T.M. கோவிந்தன், முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யங்காளை, மோகன், கருப்பையா, ஆட்டோ மணி, மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி காளிமுத்து, பாஸ்கரன், வட்ட செயலாளர்கள் கண்ணுச்சாமி, மாயழகு, வெள்ளைச்சாமி, நல்லு முருகன், தொண்டர் அணி அமிர்தராஜ், புலி சேகர், சோழவந்தான் தங்கப் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்திற்கு வந்திருந்தனர்.Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !