மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய "கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் நேரலை"

Madurai Minutes
0

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்திய "கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் நேரலை"

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  மகளிர் மருத்துவ பிரிவின் நிபுணர்கள்  குழு, வழக்கமாக செய்யப்படும்  அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் புதிய லேப்ராஸ்கோபிக் நுட்பங்கள் குறித்த நேரலை ஒன்றை  வெற்றிகரமாக நடத்தியது. அதைத் தொடர்ந்து அதனை ஒட்டிய கருத்தரங்கும்  நடைபெற்றது. 

பல எளிய மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் நாள் முழுவதும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆபரேஷன் தியேட்டரில் இருந்து  ஒளிபரப்பப்பட்ட நேரலையை ஏராளமான டாக்டர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கண்டுகளித்தனர்.  அந்த நேரலை அப்படியே பயிலரங்கிற்கு   வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் ஒளிபரப்பப்பட்டது.  இந்த பயிலரங்கு இந்தியாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்களிடையே மதிப்புமிக்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டங்களில் ஒன்றாகும்.  இதில் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட  நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கல்வி அமர்வில் கருப்பை அகற்றுவதால் ஏற்படும் பிரச்சனைகளின் மேலாண்மை மற்றும் அதில் உள்ள  சவால்களை கையாள்வதற்கான குழு விவாதம் ஆகியவை நடந்தது. இந்த செயல்முறை பற்றி பேசிய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ பிரிவின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். S. பத்மா இது குறித்து கூறியதாவது:  "கருப்பை நீக்கம் என்பது கருப்பையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் மேற்கொள்ளும் பொதுவான அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகும். நோயின் தன்மையைப் பொறுத்து இந்த நடைமுறையைச் செய்வதற்கு பல முறைகள் உள்ளன. இது பிறப்புறுப்பின் வழியாக , லேப்ராஸ்கோபி அல்லது லேப்ரோடமி மூலம் செய்யப்படலாம். முன்னதாக சிசேரியன் செய்யப்பட்டதால் ஏற்படும் ஓட்டுதல்கள், பெரிய பைப்ராய்ட் (நார்த்திசுக்கட்டி), எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் குடல் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும்  ஒட்டுதல்கள்  ஆகியவற்றால் அறுவை சிகிச்சை செய்வது கடினமாகிறது. 

இந்த அறுவை சிகிச்சை முறைகள், மகளிர் மருத்துவ பிரிவின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் பத்மா மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் ; டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகளிர் சிறுநீரக மருத்துவ நிபுணர், சென்னை; மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறியல்  தலைவர் டாக்டர் சுமதி, முன்னாள் தலைவர்கள் டாக்டர் பேராசிரியர்.C. சாந்தி, டாக்டர் K.S. சித்ரா மற்றும் குழுவினர் ஆகியோரால் செய்து கட்டப்பட்டது. இந்த செயல்முறைக்குப் பிறகு நோயாளிகள் 24 மணிநேரம் தீவிர சிகிச்சை பிரிவில்  கண்காணிக்கப்பட்டனர்.

இந்த நேரடி காணொளி பயிலரங்கை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மகப்பேறியல் நிபுணர்கள் டாக்டர்.மகாலெட்சுமி சிவகுமார், டாக்டர்.டாபின், டாக்டர்.வனிதா, டாக்டர் கேத்ரின், டாக்டர் அனந்திதா, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். தென் தமிழகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !