மதுரை கோட்டத்தில் நான்கு ரயில் நிலையங்களில் பார்சல் மேலாண்மை அமைப்பு

Madurai Minutes
0

மதுரை கோட்டத்தில் நான்கு ரயில் நிலையங்களில் பார்சல் மேலாண்மை அமைப்பு (Parcel Management System) செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள், பண்ணை விளைபொருட்கள் மற்றும்  வணிகப் பொருட்களை பெரிய நகரங்கள் மற்றும் பிற விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே பார்சல் சேவைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது ரயில்வே பார்சல் சேவை வேகமானதாகவும், நம்பகமானதாகவும், சிக்கனமாகவும் கருதப்படுகிறது.

பார்சல் மேலாண்மை அமைப்பு

பரந்த ரயில்வே நெட்வொர்க்கில் பார்சல் சரக்குகளின் இயக்கத்தை எளிதாக்க. பார்சல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (PMS) இந்திய ரயில்வேயில் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, மதுரை கோட்டம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராஜபாளையம் உள்ளிட்ட நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதியை  அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தூத்துக்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், பாம்பன், செங்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய 6 ரயில் நிலையங்களில் செயல்படுத்தும் பணி  இறுதி கட்டத்தில் உள்ளன.

நன்மைகள் - 

மின்னணு எடை, கண்காணிப்பு வசதி மற்றும் SMS அறிவுறுத்தல்கள்.

கணினிமயமாக்கப்பட்ட கவுண்டர்கள் மூலம்  பார்சல்/சாமான்களை முன்பதிவு செய்யவும், சரக்குகளை மின்னணு எடை மூலம் எடையை தானாக அளவிடவும்  உதவுகிறது.

இந்த  வசதியின்  மூலம், ஒவ்வொரு சரக்குக்கும், பத்து இலக்க  பதிவு எண் (Progressive Reference Record) உருவாக்கப்பட்டு, பார்கோடு  குயியீட்டின் மூலம் சரக்கின் இருப்பிடம்  குறித்த  கண்காணிப்பை  வழங்குகிறது . 

பார்சல்கள் மூலம் வருவாய்

பார்சல் கையாளுதல் ரயில்வேக்கு வருவாய் ஆதாரங்களில் முக்கியமான ஒன்றாகும். 2022-23 ஆம் ஆண்டில் பார்சல் கையாளுதலின் மூலம் ரூபாய் 10.97 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மதுரை கோட்டத்தில் , 15 நிலையங்களில் இருபத்தி நான்கு மணிநேரம் பார்சல் கையாளும் வசதி உள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி  உடன் பாதுகாப்பாக பயணம் செய்து எல்.டி.சி (LTC) நன்மைகளைப் பெறுங்கள்.

சென்னை :9003140680/682

மதுரை :  8287932122, 

திருச்சி : 8287932070

கோயம்புத்தூர் : 9003140655


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !