தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களை பெற விண்ணப்பிக்கலாம்

Madurai Minutes
0

மதுரை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பொதுக் கடன், புதிய பொற் கால திட்டம், சிறு வணிக கடன் ஆகிய கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.  தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், புதிய தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்னவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம்.


மேற்படிகடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.  ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3,00,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  


இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !