ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Madurai Minutes
0

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட பயிற்சி அளிக்கப்படும்.


அதன் அடிப்படையில் மேற்கண்ட பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.  HCL நிறுவனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு HCL Technologies-ல் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் B.Sc (Computing Designing) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவடத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் 2022-ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.  இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000/- முதல் ரூ.2,20,000/- வரை பெறலாம். மேலும், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.  இப்பயிற்சியினை பெற விரும்புவோர் தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !