வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நடத்தும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

Madurai Minutes
0

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


அதேபோல, மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், ரூ.70.00 இலட்சம் மதிப்பில் அலங்காநல்லூர் பேரூராட்சியில் செருவன்குளம் கண்மாய் மற்றும் சாத்தையார் ஓடை  கண்மாய்கள் தூர்வாருதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ. 798.45 இலட்சம் மதிப்பில் பரவை, வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் அ.வல்லாளப்பட்ட ஆகிய 4 பேரூராட்சிகளில் 4.875  கி.மீ. சாலை மற்றும் 12.064 கி.மீ மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.  மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ், ரூ. 206.80  இலட்சம்  மதிப்பில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி மற்றும் எழுமலை பேரூராட்சிகளில் 3.170 கி.மீ. சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், 15-ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ. 92.70 இலட்சத்தில் அ.வல்லாளப்பட்டி, பேரையூர், அலங்காநல்லூர், தே.கல்லுப்பட்டி மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சிகளில் 5 குளம் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அ.வல்லாளப்பட்டி, பேரையூர், அலங்காநல்லூர், தே.கல்லுப்பட்டி மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 15-ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ. 281.11 இலட்சத்தில் 9 பேரூராட்சிகளில் 19 எண்ணம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மற்றும் 9 பேரூராட்சிகளிலும் 18 எண்ணம் பொதுசுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்புற சாலைகள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.77.00 இலட்சத்தில் எழுமலை மற்றும் பேரையூர் ஆகிய பேரூராட்சிகளில் 2.530 கி.மீ சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.38.00 இலட்சத்தில் பாலமேடு பேரூராட்சியில் 1.000 கி.மீ சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அந்த வகையில், வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என செய்தியாளர் சுற்றுப் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !