மதுரை மாவட்டத்தில் தனியார் இ - சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Madurai Minutes
0

மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள்தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தனியார் இ-சேவை மையம் அமைக்க உரியம் வழங்கவுள்ளது. கஎனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் https://www.tnesevai.tn.gov.in/ மற்றும் http://tnega.tn.gov.in ஆகிய இணையதளங்களில் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் ப்ரீபெய்ட் இ-வாலட் மாதிரி(Prepaid ewallet model), ஆதார் பயோமெட்ரிக் உள்நுழைவு போன்ற வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க, எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டடத்தில் கணினி பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 Mbps, அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி, எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ -சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் சுயவேலைவாய்ப்புக்கடன் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.


மதுரை மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் வருகின்ற 30.06.2023-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம் என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !