மதுரையில் பாஜக ஆட்சி சாதனை புகைப்பட கண்காட்சி

Madurai Minutes
0

மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருப்பரங்குன்றத்தில் பாரத பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கண்காட்சி நடைபெற்றது. பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார்.' விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு கண்காட்சியை  தொடங்கி வைத்து பார்வையிட்டார். 


அதன்பின்பு தேசிய இணை ஒருங்கிணைப்பாள்ர் சுதாகர் ரெட்டி பேசுகையில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் குற்றச்சாட்டு எதுவும் எழவில்லை. ஆனால் திமுக அரசின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஊழல், கட்டப் பஞ்சாயத்து போன்றவை அதிகரித்து உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது . பிரதமரின் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் இந்தியாவின் கடைகோடிக்கு சென்றடைந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் மற்றும் காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளால் பாஜகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளது. எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் இவ்வாறு அவர் பேசினார்.


மேற்கு மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் காளிதாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ஆசாத், மாநில திட்ட பொறுப்பாளர் ராஜசேகர், மகளிரணி பொதுச்செயலாளர் அபிநயா, விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் பெருமாள், ரமேஷ் கண்ணன், விவசாய அணி திருங்கலம் தெற்கு மண்டல தலைவர் பாலசந்தர், அவனியாபுரம் பால தண்டாயுதபாணி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !