இந்தியாவை உலகிற்கு அறிமுகப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி - அனிர்பன் சர்மா

Madurai Minutes
0

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் பல்வேறு சாரம்சங்களை முன்னிறுத்தியதாக இருக்கிறது. உலகில் ஒருவர் காண விரும்பும் மாற்றங்களான  தனித்துவம், சர்வதேசியம் மற்றும் பலதரப்புவாதத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது.  


பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள வரலாற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜூன் 20-ந் தேதி நியூயார்க்கில் தரையிறங்கினார். இது 2014-ம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றது முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் அவர் மேற்கொண்டுள்ள முதல் அமெரிக்கப் பயணமாகும். இந்த பயணம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை ஏற்கனவே வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த பயணம் அமெரிக்கா, இந்தியா இடையிலான ஆழமான மற்றும் நெருங்கிய நட்புறவை வெளிப்படுத்துவதாகவும், இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இடையேயான நெருங்கிய பிணைப்பையும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பாசப்பிணைப்பையும் வலுப்படுத்துவதாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் எனவும், குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


 பிரதமரின் நிகழ்ச்சிகளில் முக்கியமானது ஐநாவின் தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் பங்கேற்றதுதான். இது நேரடியாக மூன்று சித்தாந்தங்களை வெளிப்படுத்துகிறது. ஐநாவில் உரையாற்றிய பிரதமர்,  ஒரே பாரதம் மற்றும் உன்னத பாரதம் என்பதன் உந்து சக்தியை உலக நாடுகளுக்கு அளிப்பதான மாதிரியாக யோகா திகழ்வதாக கூறினார். இது மனக்கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவதுடன் நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நீக்க உதவுவதாகவும் கூறினார். இந்தியா கொண்டுள்ள நீண்ட நெடிய பாரம்பரியம் நமக்குள் ஒற்றுமையை அளிப்பதுடன், அத்தகைய பாரம்பரியங்களில் ஒன்றான யோகா பயிற்சி வசுதைவ குடும்பகம் என்பதன் விரிவாக்கமாக திகழ்கிறது என்றார். 


பிரதமரின் இந்த பயணம் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஆழமான மற்றும் நெருங்கிய நட்புறவை மேம்படுத்துவதுடன் குடும்ப உறுப்பினர்களுடனான பாசப்பிணைப்பையும் நட்புறவையும் பலப்படுத்தி, இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இடையேயான இணைப்பை  விரிவாக்க உதவும்.


பிரதமரின் தீவிர முயற்சியின் பலனாக 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்திருப்பதும், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறையான லைஃப் முன்னெடுப்பும், இதே போன்ற முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் தனிநபர் முதல் உலகளாவிய மக்கள் வரை சிறந்த நடவடிக்கையாக மாறியிருக்கிறது. சிறுதானியங்கள் அளப்பரிய ஊட்டச்சத்து நன்மைகளை  அளிப்பதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையை பூர்த்தி செய்வதற்கான நீடித்த உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இதே போன்று சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை தனிமனிதரை தூய்மையானவராக கட்டமைக்க உதவுவதுடன் பசுமையான பூகோளத்தை உருவாக்கவும் உதவுகிறது.


 ஜி20 நாடுகளுக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும் தனித்துவம், சர்வதேசியம் மற்றும் பலதரப்புவாதத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் பிரதமரின் அடிப்படை சமூக மாற்றத்திற்கான முயற்சியையும் வெளிப்படுத்துகிறது. 


புதிய தனித்துவத்தை மேம்படுத்துவதற்கான கொள்கையாக டிஜிட்டல் மயமாக்கல் திகழ்கிறது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தை பொறுத்தவரை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை முன்நிறுத்துவதற்கே அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிக்கான 3 அடிப்படைகளையும் உருவாக்கும் முதல் நாடாக இந்தியா வலம் வரவிருக்கிறது. தனித்துவம் வாய்ந்த அடையாள முறை, அதிவிரைவான பணப்பரிமாற்ற முறை, தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாதவகையிலான தனிநபர் ஆவணங்கள் பகிர்வுக்கான தளம் ஆகியவையே அந்த 3 அடித்தளங்களாகும்.  இந்த 3 அடித்தளங்களும் பொது சேவை வழங்கல் மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கி புத்தாக்க முயற்சிகளை வரையறை இல்லாத உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.  இந்திய இளைஞர்களில் 99 சதவீதம் பேர் தங்களது ஆதார் அட்டையை தங்களது அடையாள ஆவணமாக பயன்படுத்துவதுடன், இந்தியாவில் நாளொன்றுக்கு 30 மில்லியன் பணப்பரிமாற்றங்கள் யூபிஐ மூலம் நடைபெறுகிறது.  இதன் மூலம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நிதித் திட்டத்தை இந்தியா இயக்கி வருகிறது. பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது முதல் நாள் நிகழ்ச்சியில் அவருடன் கலந்துரையாடிய அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் ரோமர் கூறுகையில், ஆதார் மற்றும் டிஜி லாக்கர் போன்ற தொழில்நுட்ப தீர்வுகளை எவ்வாறு சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும் என்பதை உலகிற்கு இந்தியா எடுத்துக்காட்டி இருப்பதாக கூறினார்.  


இறுதியாக புதிய மற்றும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மையை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் குரலாக இருக்கிறது.  பன்முகத்தன்மை கொண்ட வளர்ச்சி வங்கிகளை சீர்திருத்தி புத்துயிர் பெற மத்திய வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் திரு மோடி ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.  


கடந்த 9 ஆண்டுகள் தீவிரமான புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார மாற்றங்களின் காலமாகும், இது உலகளாவிய பெருந்தொற்று, பிராந்திய ஊடுருவல்கள் மற்றும் நிதி மந்தநிலை ஆகியவற்றால் தீவிரமடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு படிப்படியாக பலமடைந்து வருகிறது. இது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம், ஒரு முக்கிய உடனடி பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் குவாடுடன் ஒத்துப்போகும் முன்னோக்குகள் பற்றிய இருதரப்பு முன்முயற்சியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தமது அமெரிக்கப் பயணத்தின் போது ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், அதிபர் ஜோ பைடனை சந்திப்பது என பல்வேறு செயல்திட்டங்களை கொண்டிருந்தாலும், இந்தப் பயணம் உலகில் ஒருவர் காண விரும்பும் மாற்றங்களான  தனித்துவம், சர்வதேசியம் மற்றும் பலதரப்புவாதத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !