குமரி தொடங்கி லே வரை பயணம் மேற்கொள்ளும் அசோக் லேலண்ட்

Madurai Minutes
0

நாட்டின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமுமான அ்சோக் லேலண்ட் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கி லே வரையிலான 'மன்சில் கா சஃபர்'  என்ற பெயரில் கம்பீரமான பயணத்தைத் தொடங்கியது. கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படும் தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழாவின் முக்கியமான தருணத்தை குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்தப் பயணம் அசோக் லேலண்ட் வாகனங்களின் அபாரமான உறுதித்தன்மை, அசத்தலான ஆற்றல், நீண்ட காலம் உழைக்கும் தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4,000 கிமீ தொலைவை கடந்து செல்கிறது.


பல ஆண்டுகளாக, இந்திய ராணுவத்துக்குத் தேவையான போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் அசோக் லேலண்ட் முக்கிய பங்கு வகித்து வருகிறது.அசோக் லேலண்ட் நிறுவனமும் இந்திய ராணுவமும் மிகவும் ஆழமாக ஒன்றிணைந்து, இரு தரப்பிலும் வலுவான உறுதியுடன் கூடிய நீண்ட கால கூட்டுச் செயல்பாட்டை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்திய ராணுவத்தின் போக்குவரத்துக்கான வாகனத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அசோக் லேலண்ட் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் இந்த கூட்டுச் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ்ந்த பயணத்தின் போது, ராணுவ வீரர்கள், வாகன ஆர்வலர்கள், பொதுமக்கள், பிற கூட்டு நிறுவனங்களுடன், வளர்ச்சி, புதுமை, வெற்றி ஆகியன குறித்தும், அசோக் லேலண்டுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையிலான வெற்றிகரமான கூட்டு செயல்பாடு குறித்துமான கதைகளை பகிர்ந்து கொள்கிறது.

இதில் காட்சிக்காக, காடுகள், பாலைவனங்கள், மலைகள் என மூன்றுவிதமான நிலபரப்புகளில் கம்பீரமாக பயணிக்கும் மூன்று பிரம்மாண்டமான டிரக்குகள் இடம்பெறுகின்றன. இவை இந்திய சாலை மார்க்கமாக பயணித்து- ராணுவம் மேற்கொண்ட வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் மூன்று நிலப்பரப்புகளை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன. முதல் டிரக் பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்துடனான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நீண்ட கால உறவை எடுத்துக் காட்டுவதாகவும், இரண்டாவது டிரக், கார்கில் வீரர்களுக்கு வெற்றி அஞ்சலி செலுத்துவதோடு அவர்களது மாபெரும் வெற்றியை கொண்டாடுவதாகவும், மூன்றாவது டிரக் ராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாகவும் அமைந்திருக்கும் என அசோக் லேலண்ட் செய்திகுறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !