தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா வாய்ப்பு

Madurai Minutes
0

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா 17.07.2023 அன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்யும் வகையில் இந்த ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  1. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்
  2. அருள்மிகு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோயில்
  3. அருள்மிகு மடப்புரம் காளியம்மன் தருக்கோயில்
  4. அருள்மிகு தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோயில் 
  5. அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில்
  6. அருள்மிகு ராக்காயி அம்மன் கோயில், அழகர்கோயில்


அனைத்து கோயில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து பயணிகளை வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைத்து கோவில்களிலும் அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.


இந்த ஆண்டு ஆடிமாதத்தை முன்னிட்டு ஒரு நாள் ஆடி அம்மன் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையத்தின் மூலமாகவும், மற்றும் ஓட்டல் தமிழ்நாடு அழகர்கோவில் ரோடு, மதுரை-2-வில் நேரடியாக பதிவு  செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை - 6380699288, 9176995841, என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட சுற்றுலா அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !