சென்னையில் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் தென் மண்டல கிராமப்புற வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்

Madurai Minutes
0

மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் மண்டல கிராமப்புற வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.


சென்னையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று  தென் மண்டல கிராமப்புற வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் நிதித் துறையின் நிதி/சிறப்புச் செயலர்கள்/முதுநிலை அதிகாரிகள் பிரதிநிதித்துவத்துடன், நிதிப்பணிகள் துறை  செயலர் மற்றும் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கி  ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில், நிதிப்பணிகள் துறை  செயலர், மண்டல கிராமப்புற வங்கிகளின் பல்வேறு நிதி அளவீடுகள் பற்றிய விளக்கத்தை அளித்ததால்,  கிராமப்புற வங்கிகளின் நிதி செயல்திறன் பற்றி விவாதங்கள் நடந்தன.


கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் முக்கிய திட்டங்களான பிஎம் ஸ்வநிதி, அடல் ஓய்வூதிய திட்டம், பிஎம் ஜன் தன் திட்டம், முத்ரா திட்டம், உழவர் கடன் அட்டை,  கால்நடை வளர்ப்பு, மீன் வளம் போன்றவற்றில் மண்டல  கிராமப்புற வங்கிகள்  தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், அதில் முழுமையான நோக்கத்தை அடைய வேண்டும் என்று  வலியுறுத்தினார்.


தென் மண்டல  கிராமப்புற வங்கிகளின் வாராக் கடன்கள்,  கடன்  வழங்கல்  ஆகியவை தேசிய சராசரியை விட சிறப்பாக இருந்ததை எடுத்துக்காட்டிய அமைச்சர், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு விகிதத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


தொழில்நுட்பம், கடன் மேலாண்மை அமைப்பு மற்றும் கோர் பேங்கிங் சிஸ்டம் ஆகியவற்றை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகிய பணிகளை தென் மண்டலத்தின் கிராமப்புற வங்கிகளில் காலக்கெடுவுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.  அதிக டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் அரசின் முயற்சிக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் செயல்படும் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


எம்எஸ்எம்இக்கு சிறந்த முறையில் சேவை செய்ய புதுமையான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிதி அமைச்சர், தென் பிராந்தியத்தைச் சேர்ந்த கிராமப்புற வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும்  சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் தங்கள் இருப்பை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


பிஎம் ஸ்வநிதியின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதைத் தவிர மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொடர்புடைய விவசாயத் துறைக்கு கடன் வழங்குவதற்கான  கட்டமைப்பை மேம்படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !