பாளையம்கோட்டை சாராள் டக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்பு

Madurai Minutes
0

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக பாளையம்கோட்டை சாராள் டக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மையே சேவை இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழச்சி இன்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செல்வலதா ரமோனா தலைமை வகித்தார். 


சிறப்பு விருந்தினராக மத்திய மக்கள் தொடர்பக  உதவியாளர் திரு வேல்முருகன் கலந்துகொண்டு பேசியதாவது; சுதந்திர இந்தியாவில் காந்தியடிகள் வளர்ச்சிக்கான 18 அம்சங்களை குறிப்பிட்டதில் கிராமப்புற சுகாதாரமும் அடங்கும். சுத்தம் என்பது வீட்டினுடைய கழிவறையில் இருந்து துவங்குவதாக காந்தியடிகள் குறிப்பிட்டார். எது உரிய இடத்தில் இல்லையோ அது குப்பை என்று அழுக்குக்கு காந்தியடிகள் இலக்கணம் கூறினார்.  


மேலும் அவருடைய போராட்டங்களையும்  மற்றும்  தியாகத்தையும்  நினைவுகூர்ந்தார். சுத்தமான இந்தியா காந்தியடிகளின் என்பது கனவாகும்.  எனவே தூய்மைக்காக சேவை செய்வதே அவருடைய கனவை நாம் நிறைவேற்றுவதற்கு சமம் என்றும் தூய்மை பணியே உண்மையான சேவை பணி என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசின் சார்பாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை தூய்மையே சேவை இயக்கம் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் இதன் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடப்பதாகவும் தெரிவித்தார். 

நிகழ்ச்சியின்போது தூய்மையே சேவை உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள் உட்பட ஏறக்குறைய 4000 மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தூய்மை இந்தியா குறித்த துண்டு பிரசுரங்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணி மாணவிகள் மூலமாக பள்ளியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.  


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !