வேலூரில் ஏஜி&பி பிரதம் நிறுவனம் சார்பில் ‘பசுமை வேலூர் - சிஎன்ஜி பேரணி’

Madurai Minutes
0

பெட்ரோலிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்-டை ஆக்சைடு உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக சிஎன்ஜி விளங்கி வருகிறது. அந்த வகையில் நகர எரிவாயு வினியோகத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ஏஜி&பி பிரதம் நிறுவனம் வேலூரில் பசுமை வேலூர்- சிஎன்ஜி பேரணியை நடத்தியது.


வேலூர் கோட்டை அருகே உள்ள காந்தி சிலையில் துவங்கிய இந்த பேரணி நகர்த்தை சுற்றிவந்து தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது. இதில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத போக்குவரத்தை வலியுறுத்தும் வகையில் இம்மாவட்டத்தில் சிஎன்ஜி-ல் இயங்கும் இலகுரக வாகனங்கள், தனியார் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவை பங்கேற்றன. பேரணியை வேலூர் கலெக்டர் குமரவேல் பாண்டியன், கொடியசைத்து துவக்கி வைத்தார். மேயர் சுஜாத்தா, ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் வேலூர் மற்றும் கோலார் பிராந்திய தலைவர் கே.ஆர். வெங்கடேசன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஆர்டிஓ வெங்கடேசன், ஆர்டிஓ கவிதா, வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.


இதில் சிஎன்ஜியில் இயங்கும் ஏராளமான வாகனங்கள் பங்கேற்றன. இந்தியாவின் பசுமை எரிசக்தி பயணத்தை ஆதரிக்கும் வகையில் அதை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படும் ஏஜி&பி பிரதம் நிறுவனம் இந்நிகழ்ச்சியில் பண்டிகை கால சலுகையாக சிஎன்ஜி-ல் இயங்கும் வாகனங்களை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எரிபொருளில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கும் இலவச எரிபொருள் அட்டையை வழங்குவதாக அறிவித்தது. வேலூரில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் எந்தவொரு சிஎன்ஜி வாகனத்தையும் வாங்கும் வாடிக்கையாளருக்கும் இந்த சலுகை கிடைக்கும் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


பேரணியை துவக்கி வைத்து வேலூர் கலெக்டர் குமாரேவல் பாண்டியன் பேசுகையில், பசுமை வேலூர் - சிஎன்ஜி பேரணியானது வேலூரில் தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத போக்குவரத்துக்கான எங்கள் நோக்கத்துடன் இணைந்த ஒரு முக்கியமான முன்முயற்சியை பிரதிபலிக்கிறது. நமது நகரத்தில் பசுமையான சூழலை ஏற்படுத்த விரும்பும் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது மற்றும் இந்த சிஎன்ஜி பேரணியை இன்று துவக்கி வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பேரணியின் மூலம் சிஎன்ஜி தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுவதோடு, பல்வேறு வாகன உரிமையாளர்களும் சிஎன்ஜி எரிபொருளுக்கு மாறுவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் இது அமையும் என்று தெரிவித்தார்.


வேலூர் மற்றும் கோலார் பிராந்திய தலைவர் கே.ஆர். வெங்கடேசன் பேசுகையில், அனைவரிடத்திலும் சிஎன்ஜி பயன்பாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இந்த பேரணியை இங்கு நடத்தி உள்ளோம். பாரம்பரிய எரிபொருட்களுக்கு மாற்றாக சிஎன்ஜியில் உள்ள நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். வாகனங்களில் சிஎன்ஜி-யைப் பயன்படுத்துவதன் மூலம் அது எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது என்பதை அவர்களிடம் வலியுறுத்தி இருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் வேலூரில் நடைபெற்ற இந்த பேரணி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். 


போக்குவரத்துக்கு பாதுகாப்பான, பசுமையான மற்றும் நிலையான எரிபொருளை மேம்படுத்த பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கைய மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப வேலூரில் ஏஜி&பி பிரதம் நிறுவனம் வேலூரில் சிஎன்ஜி பேரணியை நடத்தி, இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !