புற்றுநோய் சிகிச்சையை மறுவரையறை செய்யும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்!

Madurai Minutes
0

“இந்தியாவின் விரைவான மற்றும் மிகத் துல்லியமான மார்பக புற்றுநோய் நோயறிதல் திட்டத்தை” அறிமுகம் செய்திருப்பதன் மூலம் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சையின் செயற்பரப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (4005), இதன் வழியாக புற்றுநோய் சிகிச்சையின் வரையறையையே மாற்றியமைக்கிறது. 


மார்பக புற்றுநோய்க்கு குறைவான, துல்லியமான நோயறிதலை வழங்குவதே இந்த முன்னோடித்துவ திட்டத்தின் நோக்கம். மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சையை வழங்கி,அவர்களின் உயிர்பிழைப்பு விகிதத்தை அதிகமாக்குவதிலும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும், பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதன் முக்கியத்துவத்தை இது வலுவாக சுட்டிக்காட்டுகிறது.


புதியபாதை படைக்கும் இந்த முன்னெடுப்பு திட்டம், சுகாதார சேவைகளின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. மார்பக புற்றுநோய்க்கு இந்தியாவில் இத்திட்டத்தை வழங்கும் முதல் மையமாகத் திகழ்வதில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெருமை கொள்கிறது.எதிர்காலத்தில் பிற உடலுறுப்புகளுக்கும் இதே மாதிரியை பயன்படுத்தும் சாத்தியத்திறனையும் அப்போலோ பரிசீலித்து வருகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு திட்ட மாதமாக அக்டோபர் அனுசரிக்கப்படும் நிலையில், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை உரிய நேரத்திற்குள் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இச்செயல்திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அர்ப்பணிக்கிறது.


பெண்களின் உடல்நலத்தைப் பொறுத்தவரை மார்பக புற்றுநோய் என்பது, பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. இதற்கு உரிய நேரத்தில் நோயறிதல் சோதனை செய்வதே திறன்மிக்க சிகிச்சை திட்டத்தின் அடித்தளமாக இருக்கிறது. மார்பக புற்றுநோய்க்கு எதிரான போரில் சிகிச்சையைப் போலவே. தொடக்கத்திலேயே பாதிப்பை கண்டறிவதும் முதன்மை வகிக்கிறது. ஆரம்ப நிலைகளில் கண்டறியப்படும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் சாதித்திருக்கிறது. மார்பகத்தை அகற்றாமல், தக்கவைப்பதை 60% ஆக்க நாங்கள் எண்ணியிருக்கிறோம். எமது நோயாளிகளுக்கு உயர்வான வாழ்க்கைத்தத விளைவுகளை வழங்குவதற்காக உலகளாவிய சான்றுகள் அடிப்படையிலான வழிகாட்டலின்படி, சிகிச்சை மருந்தளிப்பு அளவை படிப்படியாக குறைப்பதிலும் நாங்கள் வெற்றியடைந்திருக்கிறோம்.


உரிய நேரத்திற்குள் துல்லியமான நோயறிதல் செயல்முறையை உறுதிசெய்வதற்கென்றே“இந்தியாவின் விரைவான மற்றும் மிகத் துல்லியமான மார்பக புற்றுநோய் நோயறிதல் திட்டம்”உருவாக்கப்பட்டிருக்கிறது. சோதனை முடிவுகளை அறிய நீண்டகாலம் காத்திருக்கும் காலத்தின்போது ஏற்படும் மனஅழுத்தத்தை இது குறைக்கும். மார்பக புற்றுநோய் மேலாண்மையில்“ஆரம்ப நிலையே அதிக எளிதானது” என்ற குறிக்கோள் விருதுவாக்கை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (&006) வலுவாக நம்புகிறது.


மேமோகிராஃபி, அல்ட்ராசவுண்டு மற்றும் திசுநுண்ணாய்வு உட்பட மிக மேம்பட்ட நோயறிதல் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ள இத்திட்டம், மார்பக ஆரோக்கியத்தை மிக துல்லியமாக மதிப்பாய்வு செய்கிறது. இச்செயல்திட்டத்தின் திறமைக்கும் ஒரு சாட்சியமாக 24 மணி நேரங்களுக்குள் நோயறிதல் சோதனைகளின் முடிவுகளை நோயாளிகள் பெற முடியும். மார்பக புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் அல்லது நோயறிதல் சேவைகளை பெறவிரும்பும் பெண்கள் யாராக இருப்பினும், இதனை பயன்படுத்த முடியும்; நோயறிதல் சோதனைகளுக்கு அவசியமான கட்டளை விதிகளை அவர்கள் பூர்த்தி செய்தால் போதுமானது. அதிவேக சோதனை முடிவுகள், நோயாளிகளுக்கு ஏற்படும் கவலை குறைப்பு மற்றும் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிவது ஆகியவை இத்திட்டத்தின் முதன்மையான பலன்களாக இருக்கின்றன. சிகிச்சையின் விளைவுகளை கணிசமாக மேம்படுத்தும் மேம்பாடுகள் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.


இதில் பயன்படுத்தப்படும் நோயறிதல் சோதனைகள் பொதுவாகவே பாதுகாப்பானவை; மிகக் குறைவான ஊடுருவல் கொண்டவை; அத்துடன் இச்செயல்முறை முழுவதிலும் நோயாளியின் செளகரியத்தை உறுதி செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவ பணியாளர்களின் பங்கு முக்கியமானது. அமைவிடம், காப்பீட்டின் செயற்பரப்பு, குறிப்பிட்ட நோயறிதல் தேவைப்பாடுகள் ஆகியவற்றைச் சார்ந்து இத்திட்டத்திற்கான கட்டணத்தில் வேறுபாடுகள் இருக்கக்கூடும். இதுகுறித்த விரிவான, துல்லியமான தகவலைப் பெற அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ஐ பெண்கள் தயங்காது தொடர்பு கொள்ளலாம். மார்பக புற்றுநோய் கண்டறியப்படும் போது, தனிப்பயனாக்கப்பட்ட இச்சிகிச்சையைப் பெறுவதற்கு நோயாளிகளுக்கு வழிகாட்டவும், விரிவான சிகிச்சை திட்டத்திற்கு திறன்மிக்க புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களோடு அவர்களை இணைக்கவும் முழு திறன் கொண்டதாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இருக்கிறது.


டாக்டர். பிரவீன் ராஜன், JDMS, மதுரை, பேசுகையில், “ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோய்க்கான நோயறிதலை செய்வது மற்றும் சிகிச்சை பெறுவது ஆகியவற்றின் இன்றியமையா முக்கியத்துவத்தை கடந்த பல ஆண்டுகளாகவே அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வலியுறுத்தி வந்திருக்கிறது. விரைவான மற்றும் துல்லியமான நோய் கண்டறிதல், பயனளிக்கும் சிகிச்சைக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதோடு, நோயாளிகளின் மனதில் எழும் பதற்றத்தையும், கவலையையும் தணிக்கிறது. உரிய நேரத்திற்குள் நோயறிதல் முடிவுகளையும் மற்றும் பிரத்யேகமான சிகிச்சை திட்டத்தையும் வழங்க எங்களது நிபுணத்துவத்தையும் மற்றும் நவீன நோயறிதல் கருவிகளையும் ஒருங்கிணைக்க இத்திட்டம் எங்களுக்கு ஏதுவாக்குகிறது. நோயறிதலை செய்வதன் வழியாக.சிகிச்சையினை ஆரம்பத்திலேயே தொடங்க முடியும்; குணமடைதலுக்கான நம்பிக்கை, நோயின் போக்கை அறிய மேம்பட்ட முன்கணிப்பு மற்றும் வாழ்க்கையின் சிறந்த தரம் ஆகியவற்றை நோயாளிகளுக்கு இது வழங்கும்.” என்று கூறினார். 


மதுரை - அப்போலோ கேன்சர் சென்டர் - ன் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். பாலு மகேந்திரா  இந்நிகழ்வின்போது பேசுகையில், “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ல் ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிதலின் ஆழமான தாக்கத்தை நாங்கள் ஆழமாக புரிந்து வைத்துள்ளோம். இந்தியாவின் அதிவிரைவான மற்றும் அதிக துல்லியமான மார்பக புற்றுநோய் கண்டறிதல் செயல்திட்ட அறிமுகம், ஒரு மருத்துவ சேவை என்பதற்கும் அதிகமானது; சோதனை முடிவுகளின் பிரத்யேக சிகிச்சையையும் மற்றும் தளராத தொடர் ஆதரவையும் வழங்குவதற்கான ஒரு பொறுப்புறுதி அது. ஆரோக்கியமான, ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர்களுக்குத் தேவைப்படும் அறிவையும் மற்றும் ஆதாரங்களையும் கொண்டு பெண்கள் திறனதிகாரம் பெறுமாறு செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.


மதுரை - அப்போலோ கேன்சர் சென்டர் - ன் கதிர்வீச்சியல் துறையின் நிபுணர் டாக்டர். ஜான் ராபர்ட் பேசுகையில், “மார்பக புற்றுநோயை கண்டறிதல், அதற்கான சிகிச்சை மீது எமது பொறுப்புறுதி, மருத்துவ செயல்நேர்த்தி என்பதையும் கடந்ததாகும்; திறனதிகாரம் பெற்றிருக்கும் மற்றும் ஆதரவளிக்கப்படும் உணர்வை நோயாளிகள் பெறுவதை உறுதிசெய்யும் அளவிற்கு இப்பொறுப்புறுதி நீள்கிறது. ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிவது சிறப்பான சிகிச்சை விளைவிற்கும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கும் வழிவகுக்கும் என நாங்கள் புரிந்திருக்கிறோம்.இந்தியாவின் விரைவான மற்றும் மிகத் துல்லியமான மார்பக புற்றுநோய் கண்டறிதல் திட்டத்தின் மூலம் விரைவாக சோதனை முடிவுகளை மற்றும் நோயாளிகள் சிகிச்சையின் மூலம் குணமடைந்து மீள்வதற்கு நம்பிக்கையை வழங்குவதும் எமது நோக்கமாகும். நமது நோயாளிகளுக்கு அதிகமாக தேவைப்படும் நேரத்தில் மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவது குறித்தது இது.”


மதுரை - அப்போலோ கேன்சர் சென்டர் - ன் பரிசோதனையகத்தின் முதுநிலை நிபுணர்களான டாக்டர். உஷா ராணி மற்றும் டாக்டர். மிதுன் பேசுகையில், “புத்தாக்கம் மற்றும் கனிவான செயல்பாட்டின் வழியாக புற்றுநோய்க்கான சிகிச்சையை புரட்சிகரமாக ஆக்குவதே அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் - ல் எங்களது செயல்பாடாக இருக்கிறது. இந்த குறிக்கோள் இலக்கை நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இச்செயல்திட்டம் திகழ்கிறது. புற்றுநோய் கண்டறியப்படும் போது, அதனோடு சேர்ந்து வருகின்ற கவலையையும், கலக்கத்தையும் நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.விரைவான, துல்லியமான நோயறிதல் முடிவுகளை பெண்களுக்கு வழங்குவதன் மூலம் இந்த சுமைகளை குறைப்பது எமது இத்திட்டத்தின் நோக்கம்; தேவையின் அடிப்படையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிகிச்சைகளை நோக்கிய ஒரு தெளிவான பாதையை இது வகுத்துத் தரும். ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. எனவே, எமது நோயாளிகளின் நலனுக்காக துரிதமான சேவையை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று கூறினார்.


மதுரை கிளஸ்ட்டர் COO, திரு.நீலக்கண்ணன், அப்போலோ சிறப்பு மருத்துவமனை - பேசுகையில், “இந்தியாவின் விரைவான மற்றும் மிகத் துல்லியமான மார்பக புற்றுநோய் நோயறிதல் திட்ட அறிமுகம்”, புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தி மறுவரையறை செய்வதில் எமது தளராத பொறுப்புறுதிக்கு சாட்சியமாக இருக்கிறது.மார்பக புற்றுநோயைப் பொறுத்தவரை, உரிய நேரத்திற்குள் தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெறுவது மிக முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு உரிய நோயறிதலை துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையை தருவதும், சிகிச்சையின் மூலம் குணமளிப்பதும் எமது இலக்காகும். இச்செயல் திட்டத்தின் மூலம் காத்திருப்பு நேரங்களை மட்டும் நாங்கள் குறைப்பதில்லை. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை தொடங்குவதனால், நோயாளிகளின் சிகிச்சை பலன்களையும் நாங்கள் உயர்த்துகிறோம்; மேலும் இதன்மூலம் பாதிப்பிலிருந்து மீண்டெழும் ஆற்றலும், அதிகாரமும் பெண்களுக்கு இருக்கிறது என்ற செய்தியினையும் பரவச் செய்கிறோம்.” என்று கூறினார்.


“இந்தியாவின் விரைவான மற்றும் மிகத் துல்லியமான மார்பக புற்றுநோய் நோயறிதல் திட்டத்தை” தொடங்கியிருப்பதன் மூலம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மீண்டும் உறுதி செய்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !