அடுத்த 5 ஆண்டுகளில் கட்டுமான கருவி தொழில் 15% வளர்ச்சி அடையும்

Madurai Minutes
0

CII EXCON 2023 ஐ அறிவிக்க இன்று நகரம் சார்ந்த முன்னோட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முன்னோட்ட  நிகழ்ட்சியில் தொழில்துறை அரசு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையைச் சேர்ந்த பங்குதாரர்களின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்துள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய கட்டுமான உபகரணங்களுக்கான கண்காட்சியான EXCON, பெங்களூருவில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


கட்டுமான கருவி தொழில்துறையின் நம்பிக்கை கூறிய கண்ணோட்டம் மற்றும் EXCON 2023 ஐ சுற்றியுள்ள எதிர்பார்ப்பு ஆகியவை வரும் ஆண்டுகளில், இந்த துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு தயாராக உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் ஆகும்.  2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் இரண்டாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கட்டுமான சாதன சந்தையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொள்கை சீர்திருத்தங்களில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா தற்போது அதன் உள்கட்ட அமைப்பின் விரைவான மற்றும் மாற்றத்தக்க விரிவாக்கத்திற்கு தயாராகியுள்ளது. 


 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர், துருக்கி, இலங்கை, ருமேனியா, செக் குடியரசு மற்றும் இந்தியாவில் இருந்து 1200 கண்காட்சியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி உலகம் முழுவதிலும் இருந்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது குறித்து கருத்து தெரிவித்த EXCON 2023 Steering Committee Member and Managing Director of Schwing Stetter India Pvt Ltd, Mr V G Shaktikumar எக்ஸ்கானின் 12வது பதிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார். நாளைய இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்ற கருப்பொருளை ஏற்று சிறப்பாக பணியாற்றி வருகிறோம் எனவும் கூறினார். 2023 ஆம் ஆண்டில், கட்டுமானத்துறையானது, பல முக்கிய கண்டுபிடிப்புகளால் இயக்கப்படும் தொழில் நுட்ப புரட்சியின் உச்சத்தில் உள்ளது. ஜெனரேட்டிவ் AI, ஒரு மேம்பட்ட தொழில்நுட்பம் வடிவமைப்பு செயல்முறையை மேம்படுத்துகிறது, கட்டிட குறியீடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் போது மிகவும் திறமையான மற்றும் புதுமையான வடிவமைப்புகளை உருவாக்குகிறது என்றார். இத்துறையில் படிப்படியான விரிவாக்கம் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறிய அவர், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு 15 விழுக்காடு வளர்ச்சியை இலக்காக கொண்டு கட்டுமான உபகரண தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் தன்னை நிலைநிறுத்தி கொள்கிறது என்றும் கூறினார். 


EXCON 2023 இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக விளங்கி செயல்பட உள்ளது நமது வலுவான உள்கட்டமைப்பு வளர்ச்சியை அடையாளப்படுத்துகிறது இந்த கண்காட்சி என்றார். 


Mr PGS Dinesh Davidson, Chairman, CII Madurai Zone & Asst. Vice President கூறுகையில், தமிழகத்தின் தொழில்துறை நிலப்பரப்பின் மையமாக சென்னை முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக உள்கட்டமைப்பு வளர்ச்சியின் சக்திக்கு சான்றாகவும் விளங்குகிறது என்றார். இந்த நகரம் உலகளாவிய ஆட்டோ மேஜர்களின் விருப்பமான இடமாக மாறி உள்ளது என்று கூறினார். 


EXCON 2023 நிகழ்வாக மட்டும் அல்லாமல் இது இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கி இயக்கும் ஆற்றல் மிக்க கண்காட்சியாக செயல்பட உள்ளது. கட்டுமான உபகரண உற்பத்தி துறையில் இந்தியாவின் முக்கிய உலக நிலையை உறுதிப்படுத்தி நமது வலுவான உள்கட்ட அமைப்பு மேம்பாட்டை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். 


இந்த நிகழ்வு முன்னணி கட்டுமான உபகரண உற்பத்தியாளர்களை முன்னிலைப்படுத்துவதும் அவர்கள் தங்கள் இயந்திரங்களின் தகவல் அமைப்பு மற்றும் கட்டுமான தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தை இந்த கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த கண்காட்சியாளர்களின் தரம் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் தரம் நிலைகளை நிலை நிறுத்துவதில் வலுவான முக்கியத்துவத்தை அளித்து கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதார தீர்வுகளை இந்த கண்காட்சி பங்கேற்பாளர்கள் வழங்குவார்கள் என்றும் கூறினார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !