உன்னத் பாரத் அபியான் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு மேம்படுத்த ஜம்பலபுரம் கிராமம் தேர்வு

Madurai Minutes
0

நாடு முழுவதும் கிராமப்புறங்களை மேம்படுத்த, 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், பின்தங்கிய கிராமங்களில் கல்வி நிறுவனங்கள் மூலம் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இதில் நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய, மக்கள் தொகை, 30 ஆயிரத்துக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட கிராமங்களை  தேர்வு செய்து அக்கிராமத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயலாற்ற  வேண்டும். 


இதன்படி திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது.  இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம்  குலசேகரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு மத்திய அரசு நிதி உதவியுடன் நடந்தது.  


இதில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ் துறை தலைவர் முனைவர் முனியாண்டி கலந்துகொண்டு பயிற்சி பெற்றார். அவரை கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், சக பேராசிரியர்கள் ராமுத்தாய், ஜோதி, ஆறுமுக ஜோதி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு உள்ளிட்டார் பாராட்டினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !