அறிவுசார் தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

Madurai Minutes
0

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் சேவாலயம் மாணவர்கள் விடுதியில் அறிவுசார் தாய்மொழி வாசிப்பு நிகழ்ச்சி நடத்தி புத்தகங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.


மாணவர்கள் நூலகத்தில் வாசித்த புத்தகங்களில் அவர்கள் மனதில் நிற்கும் விஷயங்கள் குறித்து பேச வைத்து பாராட்டப்பட்டனர்.


அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில்: தாய்மொழியை முதன்மையாக விரும்பி கற்பதோடு பல்வேறு மொழிகளை அறிந்துகொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்.


இன்று நாம் பேசும் போது தாய்மொழியோடு பிற மொழிகள் இணைத்து பேசுவது இயல்பாகி விட்டது.


ஆனால் புத்தகங்களை தாய்மொழியில் வாசிக்கும் போது அதன் கருத்துக்கள் முழுமையாக மனதில் நிலைத்து நிற்கும் என்றார்.


நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்களுக்கு வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பில் உணவு வழங்கினார்.

 

சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார், அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மாணவர்கள் விடுதியின் பொறுப்பாளர் முனைவர்.கார்த்திகேசன் மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சியை நடத்தி உணவு வழங்கிய வழிகாட்டி மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !