மதுரை மத்திய சிறைக்கு சமூகவியல் கல்லூரி மாணவ மாணவிகள் விஜயம்

Madurai Minutes
0

மதுரை சமூகவியல் கல்லூரி முதுகலை சமூகப்பணி முதலாமாண்டு மாணவ மாணவிகள் 44 பேர் பேராசிரியர் திருமதி. மீனலோசினி தலைமையில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணிகள் பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்று மதுரை மத்திய சிறைக்கு வருகை புரிந்தனர்.


சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காக எடுக்கப்பட்டு வரும் பல்வேறு வகையான நடவடிக்கைகள் குறித்து மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு. பழனி அவர்கள் மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் ஆகியோர் விளக்கிக் கூறினர் .


முன்னதாக மதுரை மத்திய சிறையை சுற்றி பார்த்த மாணவ மாணவிகள் அங்கு சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள், மனநல பயிற்சி வகுப்புகள், கவுன்சிலிங் வழங்கப்படும் முறைகள் மற்றும் தொழில் கூடங்களில் அவர்கள் பணிபுரியும் இடங்களையும் நேரில் பார்வையிட்டனர்


மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் வைகை சுதந்திரப் பறவைகள்


இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரியையும் கண்டு களித்தனர். மேலும் மாணவ மாணவிகள் சிறைவாசிகளுடன் இணைந்து பாட்டுப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்


மதுரை மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறைசந்தையை பார்வையிட்டு சிறை சந்தை செயல்பாடுகளை பற்றியும் அறிந்து கொண்டனர்


மேலும் அங்கு சிறைவாசிகளால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு உள்ள ரெடிமேட் ஆடைகள் கலை நியமிக்க மர வேலைப்பாடு பொருட்களை கண்டு வியந்தனர். 


இது குறித்து கல்லூரி மாணவி கூறியதாவது எங்களது முதுகலை சமூக பணி முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் பிரிசன்  கவுன்சிலிங் என்ற ஒரு பாடத்திட்டத்தில் சிறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணி பங்களிப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக நாங்கள் இன்று மதுரை மத்திய சிறைக்கு வருகை புரிந்தோம். இங்கு சிறைவாசிகளுக்கு சிறைத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக பணிகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு தங்களுக்கு கிட்டியதாக கூறினர்.


தங்கள் மாணவர்களுக்கு இது ஒரு முழுமையான பிராக்டிகல் பயிற்சி வகுப்பாக இன்றைய நாள் அமைந்ததாகவும் அதற்கு அனுமதி அளித்த சிறைத்துறை டிஜிபி. திரு .அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் மற்றும் மதுரை சிறைத்துறை டிஐஜி திரு.பழனி மற்றும் சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் ஆகியோருக்கு பேராசிரியர் திருமதி. மீனலோசினி அவர்கள் நன்றி தெரிவித்தார்.


தமிழக சிறை துறையில் எம் எஸ் டபிள்யூ(MSW) முதுகலை சமூக பணி படித்த மாணவ மாணவிகளுக்கு சமூகவியல் வல்லுநர் பணியிட வேலை வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.  9 மத்திய சிறைகள் மற்றும் ஐந்து பெண்கள் தனி சிறைகள் ஆகியவற்றில் தலா ஒரு எண்ணிக்கையில் பணியிடம் உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !