மதுரையர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க அறிக்கை

Madurai Minutes
0

நாடு முழுவதும் 45% வாக்கு வங்கி வணிகர்கள் கையில் இருக்கின்றது. குறிப்பாக சிறு குறு நடுத்தர தொழில் அதிபர்கள் தொழிலாளர்கள் அவர்களை சேர்ந்த குடும்பத்தினர் இருக்கிறார்கள். இவர்களின் ஓட்டு பெற வேண்டும் என்று நினைத்தால் மத்திய மாநில கட்சிகள் இதையெல்லாம் நிவர்த்தி செய்தால் கொடுத்தாலே சிந்தாமல் சிதறாமல் ஓட்டுகள் அனைத்தும் உங்களுக்கே. 


கொரோனா பிறகு 30 % சிறு குறு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டது. காரணம் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் வரா கடனையில் நிறுவனங்கள் சென்று விட்டது. மீண்டும் தொழில் தொடங்க முடியவில்லை.


கொரோனா காலங்களில் கட்டவேண்டிய இஎம்ஐ வட்டிக்கு வட்டி போட்டதும் மூன்று மாதங்கள் கட்ட முடியாத நிறுவனத்தை சீல் வைத்ததற்கு காரணம். வரா கடனை (MPஆன அக்கவுண்டுக்கு) திரும்பவும் செலுத்தினாலும் எந்த வங்கிகளும் கடன் வழங்க முன்வருவதில்லை.


டோல்கேட் கட்டண உயர்வால் வாடகை இரண்டு மடங்காக ஆகிவிட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட காலம் வரை தொகையை நிர்ணயம் செய்து அதன் பிறகு கட்டணம் குறையும் என்று வாக்குறுதியை கொடுக்கப்பட்டு நிலையிலும் டோல்கேட் கட்டணம் மீண்டும் உயர்த்தி கொண்டு செல்வது அதுமட்டுமில்லாமல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் ரோடுகளுக்கும் தற்போது டோல்கேட் வசூல் செய்யப்படுகிறது. சாதாரணமாக மதுரையில் இருந்து விருதுநகர் சென்று வர டோல்கேட் கட்டணம் மட்டும் 500 ரூபாய் செலவாகின்றது. 60 கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட் தான் இருக்க வேண்டும் என்று சட்டமும் இருக்கிறது. ஆனால் அது காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இதை நிறைவேற்றினாலே பாதி டோல்கேட் பிரச்சனை தீர்வு காணப்படுகிறது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் டோல் கேட்டுகளை அகற்றப்பட வேண்டும்.


GSTயில் குறியீட்டு எண் (HSN) தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் வரி குழப்பங்கள், வரி இல்லாத பொருட்களுக்கும் வரி இருப்பதாக அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவது மட்டுமல்லாமல் மாநில அரசு பறக்கும் படை என்ற அமைத்து அதில் அதிகாரிகள் கூட வரி உள்ள பொருள் எது வரியில்லா பொருள் எது என்று கூட தெரியாமல் வாகனங்களை நிறுத்தி தேவையில்லாத பிரச்சினையில் கொண்டு வந்து வியாபாரிகளுக்கு மனச் சுமையை உருவாக்கி மன அழுத்தத்தை உருவாக்கிக் அதிகாரிகளே தங்களுக்கு சந்தேகம் இருக்கும் வண்டிகளை பரிசோதனை செய்து அதனுடைய பில்களை பெற்றுக்கொண்டு வாகனத்தை அனுப்பிவிட்டு அதன் பின் அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சென்று ஆய்வு நடத்தி பேசி முடித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் சோதனை என்ற பெயரில் சிறு சிறு தவறுகளுக்கும் பெரிய தொகை வசூல் செய்வது அவர்களை மிரட்டுவது போன்ற இரும்பு தகாத செய்திகளை செய்வதினால்  சிறு வியாபாரிகள் கூட மன உளச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள்.


சிறு குறு நிறுவனங்களில் மின்சார கட்டணம் கடுமையான உயர்வு. உதாரணத்திற்கு பத்தாயிரம் ரூபாய் கட்டி வந்த நிறுவனம் தற்போது 30 ஆயிரம் வரை கட்ட வேண்டிய சூழ்நிலை. அப்புறம் எப்படி சிறு குறுந் தொழில்கள் வளர்ச்சி அடையும். அது மட்டுமா நிறுவனம் தயார் செய்கின்ற சோலார் மின்சாரத்திற்கும் மின்சார கட்டணம் வசூல் செய்வது வருந்தத்தக்கது. எனவே மின்சார கட்டணத்தை பழைய முறையில் கொண்டுவர வேண்டும் வருடம் வருடம் பத்து சதவீதம் உயர்த்துக் கொள்ள வேண்டியது இவ்வாறு செய்வதனால் தான் தொழில் வளர்ச்சி அடையும் என்பது எந்த ஐயப்பாடும் இல்லை


கொரோனா காலகட்டத்தில் இ எம் ஐ சரியாக செலுத்தாத நபர்களுக்கு சிபில் பார்க்க வேண்டாம் என்று ஆர்பிஐ அறிவுறுத்தல் செய்திருக்கிறது. ஆனால் இதை எந்த வங்கிகளில் பின்பற்றுவது இல்லை. சிபில் ஸ்கோர் கம்மியாக இருந்தால் அவருக்கு கடன் வசதி செய்து கொடுப்பதில்லை.


ஒரு தொழில் புரிவதற்கு எத்தனை லைசென்ஸ்  எடுக்கப்பட வேண்டும் தெரியவில்லை? புரியவில்லை.? இதனால் புதிய தொழில் முனைவோர்கள் தொழிலுக்கு வருவதற்கு அச்சப்படுகிறார்கள்.


உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு அடிப்படை வசதியான ஆய்வுக்கூடங்கள் அரசு ஏற்படுத்தவில்லை இதனால் தனியாரிடம் ஆய்வு அறிக்கைகள் மூன்று மடங்கு பணம் செலுத்த விட வேண்டியது இருக்கிறது


ஜிஎஸ்டி வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்தால் கண்டிப்பாக ஜிஎஸ்டியில் இருந்து குறைக்கப்படும் என்று  அறிவித்து தற்போது வரியை ஓடிக்கொண்டே தான் செல்கின்றது புதிய பொருளுக்கு வரி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் தொழில் செய்வதை கஷ்டமாக இருக்கிறது அதிகபட்சம் இரண்டு வரிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.


ஒரு தொழில் தொடங்கப்பட வேண்டும் என்று தொழில் முனைவோர்கள் நினைக்கும் பட்சத்தில் சிங்கிள் விண்டோ அடிப்படையில் அவர்களுக்கு அனைத்து லைசென்ஸ் எடுத்துக் கொடுக்கப்பட வேண்டும். ஜி எஸ் டி யை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். HSN குறியீட்டு எண்ணை அனைத்து பொருட்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும்.அதற்கான வரிகளை தெரியப்படுத்த வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினரை கண்டறிந்து அவர்களுக்கு மீண்டும் வங்கியில் பரிந்துரை செய்து கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். 


மதுரை 6000 ஆண்டு பழமையானது ஆனால் மதுரை உடைய வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. காரணம் தொழில் துறைக்கான உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுப்பதில்லை விமான பன்னாட்டு நிறுவனமாக அறிவித்தும் அதன் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என்று சொன்னார்கள் அதற்கான வேலைப்பாடுகள் நடந்ததாக தெரியவில்லை. மதுரை மாவட்டத்தை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது அதுவும் இதுவரை நடைபெறவில்லை. குறிப்பாக தமிழகத்தில் மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றினால் மட்டுமே வளர்ச்சி அடையும் 6000 வருடம் பழமையான நகரத்தை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவதற்கு எது தடைக்கல்லாக இருக்கிறது என்று தெரியவில்லை எனவே மாநில அரசு உடனடியாக காலம் தாழ்த்தாமல் மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றப்பட வேண்டும்.


புதியதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் கடன் வழங்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் குறு சிறு தொழில்கள் வளர்ச்சி அடையும்.


நாட்டில் முதுகெலும்பாக இருக்கும் எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு காப்பாற்றப்பட வேண்டும். அவ்வாறு காப்பாற்றப்பட்டால் மட்டுமே நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடையும்.


எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துக்கு தீர்வு கண்டால் மட்டுமே தொழில் வளர்ச்சி அடையும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 


தற்போது தேர்தல் அறிவிச்சாச்சு தேர்தல் விதி நடைமுறைக்கு வந்து விட்டது எல்லோரும் கொண்டாட்டம்தான் வியாபாரிகளுக்கு திண்டாட்டம் தான் காரணம் சாதாரண சின்ன பெட்டி கடைக்காரர் கொள்முதல் செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாய் கொண்டு போக வேண்டியது இருக்கிறது. ஆனால் வழியில் அமலாக்க பிரிவு அதை பணத்தை முடக்கி வைத்து விடுகிறார்கள் அதை திரும்ப பெறுவதற்கு ஐந்து மாத காலங்கள் இதற்கு ஒரு தீர்க்கமான தீர்வை உண்டாக்கப்பட வேண்டும்.


தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் க.திருமுருகன்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !