டாடா ஐபிஎல் 2024 - மதுரை பெரிய திரைகளில் ஃபேன் பார்க்

Madurai Minutes
0

டாடா ஐபிஎல் முன்னெப்பொழுதையும் விட பெரியதாகவும், வெறியேற்றுவதாகவும் மற்றும் ஈடுபடுத்துவதாகவும் ஆகிறது!


விசில்கள், உற்சாக ஆரவாரங்கள், ஃபேஸ் பெயிண்டிங், கூச்சல்கள், பைத்தியக்காரத்தனமான ஸ்டண்ட்கள் போன்றவற்றுடன், இம்முறை இவை அனைத்தும் ரசிகர்களைப் பற்றி மட்டுமே! கிரிக்கெட், விளையாட்டு வீரர்கள், விருப்பமான அணிகள் மற்றும் பலவற்றின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வெறித்தனமான ரசிகர்களுடன் ஐபிஎல் 2024 ஃபேன் பார்க்குகளின் ரசிகர்களை கொண்டு வருகிறது. 50 நகரங்களில் உள்ள ரசிகர்களை தொட்டு, இந்த ஃபேன் பார்க்குகள் ஐபிஎல் ஜுரத்தை நாடெங்கும் எடுத்து செல்ல தயாராக இருக்கின்றன.


ஒவ்வொரு பிரமிப்பூட்டும் தருணத்தையும், ஒவ்வொரு இடத்திலும் பிரம்மாண்டமான திரைகளில் நேரடியாக ஒளிபரப்பி, ரசிகர்களுக்கு ஸ்டேடியத்தில் (விளையாட்டரங்கில) இருப்பது போன்ற உணர்வை வழங்குகிறது. இதை எந்த ரசிகரும் தவற விட முடியாது ஏனெனில் இதற்கு நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம் மற்றும் அங்குள்ள இசை, வணிகப் பொருட்கள், உணவுக் கடைகள், பானங்கள் மற்றும் ஐபிஎல்லின் அதிகாரபூர்வ ஸ்பான்ஸர்களின் சில வேடிக்கை செயல்கள் போன்றவை இங்கு வேடிக்கை மற்றும் உற்சாகத்தை இரட்டிப்பாக்கும்.


இத்தனை வேடிக்கையுடன், ரசிகர்கள் தங்கள் அணிகளை உற்சாகப்படுத்திக் கொண்டு எஸ்டேடியத்தில் (விளையாட்டரங்கில்) இருப்பதைப் போன்றே உணர்வார்கள். இந்த உற்சாகம் மற்றும் சிலிர்ப்பை அதிகமாக்க, ஃபேன் பார்க்குகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு பிரியமான அணி, விளையாட்டு வீரர் அல்லது கிரிக்கெட் மீதான தங்கள் அன்பையும் வெளிப்படுத்தும் உரிமை பெறுவார்.


ஒவ்வொரு சீசனும் முன்பை விட பெரிதாக இருக்கிறது. இம்முறை, 10 இலட்சத்திற்கும் மேலான கிரிக்கெட் ரசிகர்கள், இந்த ஃபேன் பார்க்குகளில், இந்த வெறித்தனமான உற்சாகத்தை அனுபவிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.


உங்கள் நகரில் அருகிலுள்ள ஃபேன் பார்க்கில் பவுண்டரி லைன்களில் மோதும் பந்துகள், ஹேட்ரிக்குகள் மற்றும் ஸ்பின்களை கண்டு களிக்க உங்களுள் உள்ள ரசிகனை உயிர்ப்பியுங்கள். கவுண்ட் டவுன் ஏற்கனவே துவங்கி விட்டது!


இடம்: டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கம் ரமாண்ட் ரிசர்வ் லைன், ரேஸ் கோர்ஸ் காலனி, மதுரை தேதி & நேரம் : 22 மார்ச் மாலை 5.30 மணி முதல் 23 மார்ச் மதியம் 1.30 மணி முதல்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !