ஸ்மார்ட்டான மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள எம்ஜி காமெட் மின்வாகனம் மதுரையை அடைந்தது

Madurai Minutes
0

100 ஆண்டுகள் செழுமையான பாரம்பரியம் கொண்ட ஒரு பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான எம்ஜி (மோரிஸ் கேரேஜஸ்) எம்ஜி காமெட் இவி (MG Comet EV) என்ற தனது புதிய மின்சார வாகனத்தின் மூலம் இந்தியாவில் பசுமை போக்குவரத்து தீர்வை விரைவில் பரவலாக்கும் குறிக்கோளின் மீதான அதன் பொறுப்புறுதியை பறைசாற்றுகிறது. 


இந்தியாவின் 17-க்கும் அதிகமான மாநிலங்கள் வழியாக பயணித்திருக்கும் ஸ்மார்ட்டான மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள எம்ஜி காமெட் இவி வாகனம் தமிழ்நாட்டின் பழம்பெரும் நகரான மதுரைக்கு இன்று வந்து சேர்கிறது. மதுரை போன்ற நகரங்களுக்கு நீடித்த நிலைப்புத்தன்மையுள்ள, நடைமுறைக்கு உகந்த மற்றும் செலவு சிக்கனமான போக்குவரத்து தீர்வாக திகழும் மின்சார வாகனங்கள் (EV) குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். 


குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் AC ஃபாஸ்ட் சார்ஜிங் விருப்பத்தேர்வுடன் அதன் மின்சார வாகனமான எம்ஜி காமெட் அறிமுகத்தின் மூலம், இந்நாட்டில் மின்சார வாகனங்களை பரவலாக்குவதில் தான் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை எம்ஜி மோட்டார் இந்தியா வலுவாக சுட்டிக்காட்டுகிறது. எம்ஜி காமெட்-ன் விலை ரூ. 6.98 இலட்சத்திலிருந்து தொடங்குகிறது; Exclusive, Exclusive FC, Excite, Excite FC மற்றும் Executive என்ற 5 வேறுபட்ட வேரியண்ட்களில் எம்ஜி காமெட் இப்போது கிடைக்கிறது. 


காமெட் இவி, நடைமுறைக்கு உகந்ததாக மற்றும் ஸ்மார்ட்டான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது (உள்ளே பெரிதாக மற்றும் வெளியே கச்சிதமாக); ஓட்டுவதற்கும், திருப்புவதற்கும் மற்றும் நெருக்கடியான இடங்களில் காரை நிறுத்துவதற்கும் இது எளிதானது என்பதால், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களில் பயன்படுத்த இது மிகவும் பொருத்தமான சிறந்த கார் ஆகும். i-SMART இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்துடன் கூடிய இந்த மின்சார வாகனம் 55+ இணைக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது.   AC ஸ்டார்ட், லாக், அன்லாக் மற்றும் ஸ்டேட்டஸ் பரிசோதனை போன்ற தொலைதூரத்திலிருந்தே வாகனத்தை இயக்கும் செயல்பாடுகள் இதில் உள்ளடங்கும்; கார் இருக்கும்  அமைவிட விவரத்தை பகிரும் மற்றும் அது எங்கு இருக்கிறது என்று தடமறியும் வசதியும் இதில் இருக்கிறது. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழி கலந்த 35+ ஹிங்கிலிஷ் ஆணைகள் உட்பட இந்த மின்வாகனத்தைக் கட்டுப்படுத்த 100-க்கும் அதிகமான வாய்ஸ் கமாண்டுகள் வசதியையும் இது வழங்குகிறது. இதற்கும் கூடுதலாக, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் நிலைத்தன்மை கட்டுப்பாடு, பின்புற டிஸ்க் பிரேக், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல், மடிக்கக்கூடிய திறனுடன் ORVM, டர்ன் இண்டிகேட்டர் உடன் ஒருங்கிணைந்த DRL, க்ரீப் வழிமுறை, உடல் நிறத்தில் அமைந்த ORVM உடன் AC விரைவாக சார்ஜ் ஏற்றும் விருப்பத் தேர்வுகள் போன்ற முழுமையான பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட நவீன சிறப்பம்சங்களுடன் காமெட் மின்வாகனம் கிடைக்கிறது. 


பன்முகத்திறன் கொண்ட GSEV (சர்வதேச ஸ்மார்ட் மின்சார வாகனம்) தளத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் காமெட் EV, நகர்ப்புற இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கிறது; மகிழ்ச்சியும், உற்சாகமும் கலந்த  ஒரு இனிய அனுபவத்தை வாகனம் ஓட்டும்போது இது வழங்குகிறது. சிரமமின்றி எளிதாகவும் மற்றும் மன அழுத்தம் இல்லாமலும் நகர்ப்புற சாலைகளில் போக்குவரத்தை மேற்கொள்ள நேர்த்தியான, இடவசதியுள்ள வடிவமைப்புடன் கூடிய இயற்கையான நெகிழ்வுத்திறனுள்ள ஸ்மார்ட் மின்சார வாகனமாக எம்ஜி காமெட் இவி திகழ்கிறது.


மின்வாகன தளத்தில் தொடக்கத்திலேயே கால் பதித்த பெருமையினைக் கொண்டிருக்கும் எம்ஜி மோட்டார் இந்தியா, மின்வாகன தயாரிப்புகளின் தொகுப்பையும் மற்றும் அதற்கான சூழலமைப்பையும் உருவாக்குவதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. மின்சார வாகனங்களின் ஆதாயங்களையும் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான புதிய கண்டுபிடிப்புகள், மேம்பாடுகள் பற்றியும் இந்நாட்டின் பொதுமக்கள் அனைவருக்கும் எடுத்துக்கூறி பயிற்றுவிப்பது மிக முக்கியமானது என்று எம்ஜி இந்தியா கருதுகிறது. மின்வாகன பயன்பாட்டை பரவலாக்குவதில் ஒரு அத்தியாவசிய அம்சமான சார்ஜிங் செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கணிசமான முதலீடுகளை எம்ஜி செய்திருக்கிறது; நாடெங்கிலும் பொது அமைவிடங்களிலும் மற்றும் இல்லங்களிலும் சார்ஜிங் சாதனங்கள் உட்பட 15,000-க்கும் அதிகமான சார்ஜிங் தொடுமுனைகளை எம்ஜி இதுவரை நிறுவியிருக்கிறது. 


விலைப்பட்டியல் 



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !