JCI மதுரை மல்லிகை கிளையின் 11 ஆவது பதவியேற்பு விழா

Madurai Minutes
0

இந்தியா JCOM துணை தலைவர் Jc JFM பிரபு அவர்களின் வழிகாட்டுதலின் படி, மண்டலம் 17 ஐ சார்ந்த கிளை இயக்கமான JCI மதுரை மல்லிகையின் 2024 க்கான தலைவர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா சனிக்கிழமை 24 டிசம்பர் 2023 அன்று மாலை 6 ம‌ணியள‌வி‌ல் மதுரை ஸ்டேர்லிங் வி கிராண்ட ஹோடேலில் இனிதே நடந்தேறியது.


2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு Jc வெ.நவீன் நாயக் அவர்களும், செயலாளராக திரு Jc சு.கௌசிக் அவர்களும், பொருளாளராக திரு Jc ர.பாலகுமாரன் அவர்களும் மேலும் ஏனைய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும் பிரமாணம் எடுத்து பதவி ஏற்றனர்.


இந்த நன்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மண்டலம் 17 இன் மண்டல தலைவர் JCI Sen சுந்தரேஸ்வரன் அவர்கள், மரு.லாவகுமார் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..


உடனடி முன்னாள் தலைவர் Jc வைரவாராஜா அவர்கள் 2023 க்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 


இந்நிகழ்ச்சியில் தலைவர் பொறுப்பேற்க்கும் Jc வெ.நவீன் நாயக் அவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டார். பொது நல நோக்குடனும், சமுக மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டம் துவங்கப்பட்டன.


சுத்தமான தண்ணீர்  என்ற திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் உள்ள குழந்தைகள் சுகாதாரமான தண்ணீர் அருந்த திட்டம் வகுகப்பட்டது.  ஆகிய திட்டம் வெளியிடப்பட்டன.


இந்த நிகழ்வில் JCI மதுரை மல்லிகை கிளையின் மூத்த உறுப்பினர்கள் ரத்னராஜ், ஜெகநாதன் மற்றும் ராம் பிரகாஷ் ஆகியோரும், மதுரை,ஈரோடு மற்றும் சேலம் கிளை இயக்கங்களை சேர்ந்த முன்னால்,இந்நாள் மற்றும் தேர்வு செய்யபட்டுள்ள கிளை தலைவர்களும் மற்றும் உறுப்பினர்களும், பல மண்டல அலுவலர்களும், மற்ற கிளை உறுப்பினர்களும், JCI மதுரை மல்லிகை கிளையின் உறுப்பினர்களும், JCOM இயக்கத்தின் முன்னால்,இந்நாள் மற்றும் தேர்வு செய்யபட்டுள்ள தலைவர்களும் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


இந்த இயக்கத்தில் அனைத்து இளம் தொழில் முனைவோர்கள் இந்த இயக்கத்தில் இணைத்து தங்களையும், நிறுவனத்தையும் வளர்ச்சி பாதையில் எடுத்து செல்ல நாட வேண்டிய தொலைபேசி எண்கள்  81 22 17 22 18, 80 988 66 966, 90 875 07 406  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !