அன்னை பாத்திமா கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

Madurai Minutes
0

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியில்  அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கல்லூரியின் தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரது அனுமதியின் பேரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் ஆற்றிய தலைமையுரையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள்  இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள் என்றும் இயேசு கிறிஸ்து மேரி மாதாவிற்கு ஆண் துணையில்லாமல் பிறந்த அற்புதக் குழந்தை என்றும் மக்களிடையே அன்பையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத்தன்மையையும் போதனை செய்தவர் என்றும், எந்த ஒரு மதம் சார்ந்த பண்டிகை கொண்டாட்டங்களாக இருந்தாலும், சமுதாயம் சார்ந்த பண்டிகை கொண்டாட்டங்களாக இருந்தாலும் அவற்றின் முக்கிய நோக்கம், மக்களை ஒன்று சேர்த்து அதன் மூலம் வேற்றுமைகளை  மறந்து ஒருவருக்கொருவர் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொள்வது ஆகும் எனத் தெரிவித்து வந்திருந்த அனைவருக்கும்  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 


இவ்விழாவையொட்டி  கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது.  கிறிஸ்துமஸ் கேக் செய்வதற்காக கடந்த மாதமே முந்திரிப் பருப்பு, உலர்ந்த முந்திரி பழம், டுட்டி புருட்டி பழங்கள், பேரிச்சம் பழங்கள் போன்றவை 50 கிலோ அளவிலும், 5 லிட்டர் திராட்சை ரசம் மற்றும் தேவையான இதர பொருட்களும் சேர்க்கப்பட்டு ஒரு மாத காலம் பாதுகாப்பான முறையில் நொதிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட 100 கிலோ மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.


நிகழ்ச்சியில் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ், வணிக மேலாண்மை துறை இயக்குனர் நடேச பாண்டியன்,  டீன் பேராசிரியர் நாசர், தமிழ் துறை தலைவர் டாக்டர் முனியாண்டி, ஆங்கில துறைத் தலைவர் ராஜ்குமார், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் கார்த்திகா,  பாரன்சிக் சயின்ஸ் துறைத் தலைவர் சீனிவாசன், பிபிஏ ஏவியேசன் துறைத் தலைவர் கார்த்திகா, ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவர் சௌபியா, வணிகவியல் துறை பேராசிரியர் ஷமீமா, தீ மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் சசிகலா, ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை பேராசிரியர்கள் விக்னேஸ்வர சீமாட்டி, செந்தில் குமார், அருண் குமார், செண்பகராமன், கங்காதரன், சிஸ்டம் இன்ஜினியர் உதய கதிரவன் உள்ளிட்ட 50 பேராசிரியர்களும் 70 மாணவ மாணவிகளும் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பேராசிரியர் பால்ராஜ்  தலைமையில் மாணவ-மாணவியர்கள் சித்திக், தவ்ஃபீக், ஆர்யா, ரெபின் மற்றும் முகமது அஜ்மான், செல்சியா, குந்தவி, காளீஸ்வரி ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !