மதுரையில் முதல் முறையாக டிஜிட்டல் அரசியல் கருத்தரங்கு மார்ச் 2ம்தேதி நடக்கிறது

Madurai Minutes
0

மதுரையில் முதல்முறையாக டிஜிட்டல் அரசியல் கருத்தரங்கு வருகிற மார்ச் 2ம் தேதி நடக்கிறது. டிஜிட்டாமேட்டிக்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்வில், சு.வெங்கடேசன் எம்.பி., டாக்டர் பி.சரவணன், பேராசிரியர் இராம சீனிவாசன் உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஐ.டி. விங்க் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.


அடுத்த தலைமுறைக்கான அரசியல் சேவை வழங்கும் நிறுவனமான டிஜிட்டாமேட்டிக்ஸ் நடத்தும் "டிஜிட்டல் அரசியல்" கருத்தரங்கு வருகிற மார்ச் 2ம்தேதி மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸின் மெப்கோ மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் இளம் தலைமுறை இந்த 2024 தேர்தலை எப்படி பார்க்கிறது? இந்த தேர்தல் முடிவுகளை தீர்மானம் செய்யப்போவது எது? தேர்தலில் டிஜிட்டல் பிரச்சாரத்தின் பங்கு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப் படுகிறது.


இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக சு.வெங்கடேசன் எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)), மாணிக்கம் தாகூர் எம்.பி. (காங்கிரஸ்), டாக்டர் பி.சரவணன் (அதிமுக), பேராசிரியர் இராம சீனிவாசன் (பாஜக), அனந்தன் அய்யாசாமி (பாஜக), மரியா ஜெனிபர் தீபக் (நாம் தமிழர் கட்சி), டேவிட் அண்ணாதுரை (அமுமுக) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று டிஜிட்டல் அரசியல் குறித்து பேசவுள்ளனர்.


மேலும், காங்கிரஸ் கட்சி ஐடி விங் அலிம் அல்புகாரி,  பாஜக ஐடி விங் மாநில செயலாளர் விஷ்ணு பிரசாத், நாம் தமிழர் கட்சி ஐடி விங் மாநில இணைச் செயலாளர் ஆர்.பி.சந்தோஷ் உள்பட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஐடி விங் நிர்வாகிகள் பங்கேற்று இன்றைய காலகட்டத்தில் அரசியலில் டிஜிட்டல் எந்த அளவுக்கு அவசியமானதாகிறது என்பது குறித்து பேசுகிறார்கள். பேசு தமிழா பேசி இராஜவேல் நாகராஜன், சாட்டை துரைமுருகன், ப்ளாக்‌ஷிப் சி.இ.ஒ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் டிஜிட்டல் அரசியல் குறித்து பேசுகிறார்கள்.


இந்த கருத்தரங்கு குறித்து டிஜிட்டாமேட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே.கே.முத்து கூறுகையில், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அரசியலுக்கும் அத்தியாவசியம் ஆகி விட்டது. தொழில்நுட்பத்தை எவ்வாறு அரசியலுக்கு பயன்படுத்துவது? அதன் பயன்கள் என்ன? என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இதில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பேஸ்புக், யூ டியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், சாஃட்வேர் மற்றும் டிஜிட்டல் சர்வீஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்கும். தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கவும், வருவாய் ஈட்டவும் ஒரு வாய்ப்பாக இந்த கருத்தரங்கு இருக்கும், என்றார்.


மதுரையில் முதல்முறையாக நடைபெற உள்ள இந்த டிஜிட்டல் அரசியல் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 8220 44 99 33 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். நுழைவுக் கட்டணம் ரூ. 700.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !