சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு பட்ஜெட்டில் எந்த சலுகைகளும் இல்லை: மடீட்சியா தலைவர்

Madurai Minutes
0

சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு எதிர்பார்த்த எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என மடீட்சியா தலைவர் லெட்சுமி நாராயணன்  தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


2024ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.


வருமான வரித் திட்டத்தில் தனிநபர் வருமான உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பணப்புழக்கம் கூடுவதற்கான வாய்புகள் இல்லை.


மறைமுக வரிகளான ஜிஎஸ்டி-யில் எந்த மாற்றமும் இல்லை. ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமைப் படுத்தவில்லை.


கொரோனா காலகட்டத்திற்குப்பின், மூலப்பொருவட்ள்கள் விலை ஏற்றம், மின்கட்டன உயர்வு, வேலையாட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் 29 இலட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ழிறிகி ஆகியுள்ளன. இதுபோல் நலிவடைந்த சிறு குறு தொழில்களை மீட்பதற்கு எந்தவிதமான சலுகைகளும் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.   


வங்கி வட்டி விகிதங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிதி மேலான்மை செய்வதில் சிரமப்படுகிறார்கள். வட்டி விகிதங்கள் குறைக்கப் பட்டிருக்க வேண்டும்.


சோலார் மேல்கூரை அமைப்பதில் எந்தவித மானியமும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் சோலார் உற்பத்திக்கு வீடுகளுக்கு ஒதுக்கியுள்ள நிதிபோல் தொழில் துறைக்கான சலுகைகள் எதுவும் இல்லை.


மொத்தத்தில் சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு எதிர்பார்த்த எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.


சுற்றுலாத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டதில் மதுரைக்கும் ஒதுக்கப்பட்டு மதுரை வளர்ச்சி அடைய வேண்டும்.


டிபன்ஸ் R & D  கான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கார்பஸ் நிதி ஒரு லட்சம் கோடி ஒடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.


மூன்று பிரதான ரயில் வழி திட்டம் உருவாக்கப்பட்டதும் வரவேற்கத்தக்கது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !