திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் விவேகானந்த ஜெயந்தி விழா

Madurai Minutes
0

திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 10.02.2024 சனிக்கிழமை அன்று விவேகானந்த ஜெயந்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக டாக்டர். எஸ். நாகராஜ முருகன், தனியார் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை கலந்து கொண்டு சிறப்பித்தார். 


மாணவர்கள் அனைவரும் கூட்டுப் பயிற்சி (Mass Drill) செய்து காண்பித்தனர். மேலும் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு (March Past), சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக், மால்க்கம், தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு, யோகாசனம், பேண்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர். அதனைத் தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தின அணிவகுப்பு மற்றும் சென்னை மெரினா கடற்கரையில் நிகழ்ந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கும்  திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்த, உபதலைவர் சுவாமி நியமானந்த மற்றும் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினர். 


மேலும் 10.02.2024 அன்று மாலை, விவேகானந்த ஜெயந்தி விழா நிகழ்ச்சியானது கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி வாழ்த்துப்பாடலுடன் இனிதே தொடங்கியது. ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த அருளுரை வழங்கினார். திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சுவாமி சுத்தானந்த தலைமையில், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர், சுவாமி நியமானந்த, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த, ஸ்ரீமத் சுவாமி அபேதானந்த, விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் செயலர் பரமானந்த, விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த மற்றும் திருப்புனவாசல் விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி செயல் சுவாமி அட்சரானந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கல்லூரியின் முதல்வர் தி.வெங்கடேசன், துணை முதல்வர் கோ.கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர் மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் யு.சதீஷ்பாபு ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வ.க.ராமகிருண்னன் அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். 


இந்நிகழ்ச்சி தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ண தபோவன கிளை நிறுவன சுவாமிகள் மற்றும் அம்பாக்கள், பெற்றோர்கள், தாய்மார்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், தபோவனத்தைச் சார்ந்த கிளை நிறுவனங்களின் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் தபோவன அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !