திருவேடகம், விவேகானந்த கல்லூரி மாணவர்கள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை

Madurai Minutes
0

2024 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அன்று தேனி மாவட்டம், ஶ்ரீரெங்கபுரத்தில் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை, தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலைக் கழகம் மற்றும் சோழன் உலகசாதனை புத்தக நிறுவனம் உலக சாதனைக்கான சிலம்பாட்டத்தை இணைந்து நடத்தியது. அதிகமான மாணவர்கள் ஒன்றிணைந்து புலி முக மூடி அணிந்து நடனமாடிக் கொண்டு சிலம்பத்தில் பல்வேறு சுற்று முறைகளை சுற்றி கொண்டு 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனைக்காக முயற்சித்தனர். 


இந்த முயற்சியில் தமிழ்நாட்டிலிருந்து 221 மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருவேடகம், விவேகானந்த கல்லூரி சார்பாக 14 மாணவர்கள் முறையே அருண்பிரகதீஷ், சிவப்பிரகாஷ், கார்த்திகேயன், பூமிராஜா, ஹரிஷ், அருண்குமார், நாகபாண்டி, மாதவன், விகாஷ், வேல்மணிகண்டன், விக்னேஷ், சந்தோஷ், ஜனார்த்தனன், திரவியகண்ணன் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தனர். மூன்றாம் ஆண்டு பொருளியல் துறை மாணவர் அருண்பிரகதீஷ் சிறந்த வீரருக்கான விருது பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.


விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் தி. வெங்கடேசன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர். மேலும் மாணவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெ. நிரேந்தன், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் V.சாமிநாதன் மற்றும் யோகா மாஸ்டர் ஐ.இருளப்பன் ஆகியோரை பாராட்டினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !